உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

பண்ணையில் விளைந்த பண்டம்
பாதிக்குக் குறைத்து வாங்கித்
திண்ணையில் குந்தி விற்கும்
திருவாளர், தேசம் தேம்பக்
கண்ணிய மென்ப தைக்கை
கழுவினோ ராகிக் காசை
யெண்ணுவ தொன்றே வாழ்வென்
றிறுமாந்தோ ராவ தின்றே!

விலைவாசி விடம்போ லேற்றி
வியாபாரி காசு சேர்க்க,
உலை-வாசி காணா தோராய்
உழைப்பாள ருள்ளம் குன்ற
'அலைவாசி' யெனவே மக்கள்
அலைந்திட' அகம்நோ காது
சிலைவாசி காத்தி ருப்பான்,
சேர்ந்தோர்தம்' கைக்கா சுக்கே!

வல்லையே வழக்கா றாக்கி
வாணிகம் செய்து வாழ்ந்தே,
'இல்லையே' யென்னும் சொல்லில்
இருப்பினை யிருத்தி வைத்துத்
தொல்லையே யின்றித் துய்த்துத்
தோற்றத்தில் பெரியோ ரானோர்,
ஒல்லையே வூசெவ் வொன்ற
யுறவுகொள் வதையோ ராரே?

கையிலே, 'காலம் காட்டி'
கட்டியும் கருதான் காலம்!
பொய்யிலே பொழுதும் போக்கிப்
பொதுமகள்,- மதுவும் போற்றி,
மெய்யிலே மயக்க மெய்தி
மெத்தையில் வாந்தி செய்யும்
பையலைப் பெற்ற செல்வன்,
படுந்துயர்க் களவொன் றுண்டோ ?