பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

தேசுசேர்த் தறியார்; தெள்ளத்
தெரிந்தோரைச் சேரார்; தீனர்
ஆசிசேர்த் தாரு மாகார்;
ஆசையின் வழியில் சென்று
மாசுசேர்த் திருந்து வாழும்
மனிதர், தம் மடிக னக்கும்
காசு சேர்த் திருந்து மென்னாம்,
கடைத்தேற்ற மதுகாட் டாதே!

ஓதொன்றி யுளத்தை யோம்பும்
ஒண் தமிழ் புலவன் கைநூல்
சூதொன்றிச் சுகத்தில் சொக்கும்
சோம்பேறி கொண்ட தொப்பக்
கோதின்றி யுழுது வித்தும்
குடிமகன் நிலத்தைக் கோரி,
வாதொன்றி வணிகன் வாங்க
வயலில் புல் வளர்வ தின்றே !

விலையேற்றி நியதி தப்பி
வியாபாரி வெறுப்பை யூட்டின்
உலையேற்றும் வகையைக் காணா
துழைப்பவ ருள்ளம் பொங்கி
'அலையேற்றிக் கரையைக் கொல்லும்
ஆழ்கட' லெனவே மாறி
மலையேற்றி விடுவர், 'போய்வாழ்
மாவொடு மிருந்தங்' கென்றே.

புறமெலாம் போற்று கின்ற
புகழதூம் புதைந்து போக,
அறமெலாம் ஆற்று கின்ற
அருளதூம் அடக்க மாக,
மறமெலாம் மாற்று கின்ற
மாண்பதூம் மறைந்து, மானத்
திறமெலாம் தேற்ற மற்றுத்
தெளிவதூம் திகைப்ப தின்றே!