பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

பொம்மையை வைத்துப் போற்றிப்
பொழுதை வீண் செய்தி டாது
செம்மையில் சிந்தை வைத்துச்
செய்வது திருந்தச் செய்து,
தம்மைத்தா மாண்டு கொள்ளும்
தரமுள்ள தக்கார்க் கன்றி
இம்மையே, மறுமை யே-மற்
றெதுவொன்று மெய்தி டாதே!

ஆறுகண் டறிவ றிந்தாங்
கடங்கிவாழ்ந் தமைதி காணார்;
ஊறுகண் டூக்க முற்றாங்
குறுவதை யெதிர்த்து வெல்லார்;
பேறுகண் டும்பே ரில்லார்,-
பிறந்துண்டிங் கிருந்தி றந்து
நீறுகண் டாரிஃ தன்றேல்,
நிலங்கண்டு புதைந்தா ரன்றே!