பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

கையும், கல்லும் கத்தியும் ஆயுதமாக இருந்ததுபோய் அனுவையும் ஐட் ரஜனையும் ஆயுதமாக மாற்றிக் கொண்டு மக்கள் தம்மைத் தாமே இன்று கொன்று கொள்ள முனைந்து உள்ளனர். ஆயினும் ஆராய்ச்சியுள்ள மனிதன், விளைவுகளை எண்ணிப்பார்க்கும் மனிதன் இந்த நிலைக்கு எப்படி 'ததாஸ்து' கூற இயலும்?

'தானாடா விடினும் தன் சதையாடும்’ எனும் வழக்குச் சொல் உண்மையல்லவா? ஆகவே சாத்விகத்தின் மனோ நிலையும் சகோதரர்களின் அறியாமையின் அழிவைக் கண்டு வருந்தி ஒரு நாள் வலிய வந்து உரைக்கவும் செய்தது.

அருமைத் தம்பிகளே! நமது வயிறு பசிக்கிறதெனின் நாமே தான் உணவு அருந்த வேண்டும்; நமது உடல் வலிக்கிறதெனின், அதற்கும் நாமே தான் மருந்தருந்த வேண்டும். நமக்காகப் பிறர் இதனைச் செய்ய இயலாதே!

அசத்திலிருந்து சத்துக்குச் செல்ல வேண்டினும், இருளிலிருந்து ஒளிக்குச் செல்ல வேண்டினும் நம்மைப் பிறர் யாரும் அழைத்துச் செல்ல முடியாது. தட்டுத் தடுமாறிக் கொண்டேனும் அவற்றை நாடி நாமேதான் செல்ல வேண்டி உள்ளது.

முதலில் நம்மிடமுள்ள எல்லா விதமான - பொய் பொருமை, சூது, சுயநலம், வம்பு, வழக்கு முதலிய - அசத்துக்களை அறவே கூட்டிக் குப்பை மேட்டில் கொட்டித் நாயவராவோமாயின் நாம் வெகு எளிதாகச் சத்துக்குச்சென்று சேர்ந்துவிடுவோம்; அங்கேயே ஒளியும் காண்போம்; ஒழுங்கும் அழகுமாகிய சு + வர்க்கம் = சுவர்க்கம் அங்கேதான் இருக்கிறது, நிரந்தரமாக நாமும் அங்கு, அமைதியாக ஆனந்தமாக வாழலாம், என்றது.

'அண்ணா! நீர் அடிகளார் வாக்கை யறியீரானிர்; குருவின் வாக்கைக் கொள்ளீரானீர். வைகுந்தமும், கைலாயமும் நம் வீட்டு வாயிலில் இல்லை; இவைகள், நம் கண்காணாத