பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

விடியவே எழுந்து நண்பன்
வெளியில்போய் விட்ட செய்தி,
குடியினுக் குறுப்பாய்க் கொண்ட
குதிரையைக் காணா தோர்ந்தேன்;
படியினில் பலரும் சொந்தப்
பணியினைப் பார்ப்பா ரன்றோ?
நொடியினி லதையந் நங்கை
நுவன் றனள், நோன்பா மாறே:

உளத்தொளி யின்றி யோரா
துறைகிற எம்ம னோர்க்குக்
குளத்தொளி கொண்டு பூத்த
கோகனம் கொள்வண் டாக்கிக்
களத்தொளிர் காட்சி யாகக்
கவிதையி லமைத்துக் காண
அளித்தொளி செய்யு முங்கட்
காவன செயச்சென் றுள்ளார்!

வண்டினை யழைத்துத் தண்தேன்
வழங்கியே கமலங் காக்கும்;
தண்டினிற் கமலந் தன்னைத்
தயை கூர்ந்து தண்ணீர் காக்கும்;
கொண்ட தண் ணீரைக் காக்கும்
குளமெனக் குடிமக் கள்யாம்
கண்டநற் கவிஞ ரும்மைக்
காப்பதும் கடனா" மென்றாள்.

கோரையின் குனிவை நீக்கிக்
குச்சியாய் நிறுத்தி னோர்யார்?
பாரையார் பண்ப டுத்திப்
பயனுறச் செய்தோர்? பார்த்திவ்
வூரையார் திருத்தி னோர்? நா
ணுணர நீ யுரையென் றேன"க்
காரையார் குழலாய் வைத்தோர்
கயற்கண்ணிக் கெனக்கண் ணுற்றே!