பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சோலை

மடைப்பள்ளிக் குள்ளம் மாண்பு
மான்புக்கு மறைய வே. நான்
‘அடைப்புள்'ளென் றமர்ந்து வீணாய்
அகமலுப் படையா தவ்வூ
ரிடைப்பள்ளிக் கருகி லுள்ள
எழில்மிகு மரசா லத்திப்
புடைப்பள்ளி கொண்ட சோலைப்
புறங்காணப் புலனெண் ணிற்றே!

உண்பன வுண்டு டுத்தி
யுறங்கியே கழிக்கும் வாழ்வு
வெண்பனி வீய்வுற் றென்ன
வீணாத லறிந்து, வேட்கைப்
பண்பினில் புகழைப் பற்றும்
பாவையைத் துணையாய்ப் பெற்ற
நண்பனைக் காணே னூரின்
நலங்காணச் சென்றேன் நானே!

பார் நல்ல தாயும், பாரில்
பாங்காகப் பயிர்செய் துண்ணும்
ஊர் நல்ல தாயும், ஊரில்
உள்ளதோர் தெருக்க ளெல்லாம் -
நேர் நல்ல தாயும், நேரா
நெஞ்சென - நெழிந்தி ருக்கும்;
ஏர் நல்ல தாயும், ஈர்க்கும்
எருதேறு மாறுற் றற்றே!

‘கோவிலுண்' டென்றான், குந்தும்
குறிப்பொடங் கொருவன்; ‘கொம்பில்
வாவலுண் டென்றான், வந்த'
வழியில் நின் றொருவன்; ‘வண்ண
நாவலுண்' டென்றான், 'உண்டால்
நாவெலா மினிக்கு' மென்றான்,
ஆவலுண் டுளம சோகம்
ஆகி நான் நின்றே னங்கே!