பக்கம்:புராண மதங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



- - அண்ணாதுரை 13 போக்க வேண்டும், சேரிகளைச் சீர்திருத்த வேண்டும், உழவனின் உழைப்புக்குத் தக்க ஊதியம் தரவேண்டும், என்ற இன்னோரன்ன பிற சீர்திருத்தங்கள் தேவை என்று செப்பினரா? அதற்காக, அவர்களிடம் அன்பு காட்டிய அரசர்களிடம் வாதாடினரா? பிரச்சாரம் புரிந் தனரா? இல்லயே! அவர்களுடைய கவலை எல்லாம், பக்தி பரவ வேண்டும், பரமனைத் தொழ வேண்டும், மூர்த்தி ஸ்தலம் தீர்த்த யாத்திரைகளின் பெருமை மக்கள் அறிதல் வேண்டும் என்பதிலே சென்றதே யொழிய, இன்று நாம், சீர்திருத்தம்" என்று எண்ணு வதிலா அவர்கள் அக்கரை காட்டினர்? காட்டி யிருக்க முடியுமா? ஒரு கட்டிடம் கலனாகி யிருக்கிறது என்று வைத் துக் கொள்ளுங்கள், அதைப் புதுப்பிக்க ஆரம்பிக்கி றோம், அதற்கான அதிகாரி திட்டம் தீட்டுகிறார். முத லில் அவர் கேட்பார் இந்தக் கட்டிடம் கட்டி எத்தனை வருடங்கள் ஆயிற்று என்று, இந்தக் கட்டிடம் தாது வருடப் பஞ்சத்திற்கு முன்பு கட்டப்பட்ட தென்று நம் தாத்தா கூறியதாகக் கூறிவோம். ஓ! அப்படியா! மிகப் பழைய கட்டிடம் ; ஆகையால்தான் கலனாகி விட் டது என்று அவர் கூறுவார். பழைய கட்டிடமா யிருந் தாலும் கடைக்கால் எத்தனை அடி ஆழம் என்பார். 10, 15, அடி என்போம், மணல் எத்தனை வண்டிகள் கொட்டினார்கள் என்றால் 40, 50 வண்டிகள் என் போம்; பாலாற்று மணலா வேகவதி ஆற்று மணலா என்ற கேள்வியும் பிறக்கும். வேகவதி ஆற்று மணல் தான் என்போம். அது உப்புமண் கலந்த மணல் அத னால்தான் சீக்கிரம் உளுத்துப் போய் விட்டது. அதை அகற்றி உரமான மணலைப் போடவேண்டும் என்பார் அவர். அதுபோலத்தான் சமுதாயம் என்னும் கட்டிட மானது கலனாகிச் சரியும் நிலையிற் கிடக்கிறது. நம் சமு தாயத்தின் அடிப்படை சரியல்ல. அது உவர் மண்ணால் உண்டாக்கப்பட்ட அஸ்திவாரத்தின் மீது அமைக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/14&oldid=1033253" இலிருந்து மீள்விக்கப்பட்டது