பக்கம்:புராண மதங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புராண - மதங்கள் பட்டிருக்கிறது, எனவே, அது காலப் போக்கில் சரிக் றது. அதுவும் நாம் காற்று வசதிக்காக மாடிமேல் மாடி கட்டிக்கொண்டே செல்லச் செல்ல சென்னையில் சரிந்த பிருதிவி இன்ஷியூரன்ஸ் கம்பெனி கட்டிடம் போல் விழுந்து கொண்டேதான் இருக்கிறது. சரிந்த கட்டிடத் தின் சாரலிலே நின்று கொண்டு நமது புலவர் பெருமக் கள் பெரிய புராணத்தையும் கம்ப இராமாயணத்தையும் ஓதிச் சரியாமல் செய்யப் பார்க்கிறார்கள். தேசீயத் தோழர்களோ , தக்ளியையும் இராட்டினத்தையும் கொண்டு சரியும் கட்டிடத்தைத் தாங்கத் துடிக்கின்ற னர். வேதாந்திகளோ கீதையும், வேதமும், தத்துவ விசாரணையும் சரிவைச் சமாளிக்கும் என்று நம்புகின்ற னர். எல்லோரும் கட்டிடம் சரிவதைக் காண்கிறார் கள்; ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் சரிவதைத் திருத்துவது எப்படி? சரியாமல் அமைப்பது எப்படி? என்பதிலேதான் தகறார். தோழர்களே! நான் கூறுகிறேன், இந்தச் சமுதா யம் சரிகிறது, சரிந்துகொண் டிருக்கிறது, நெடு நாட்க ளாகவே சரிந்து கொண்டு வருகிறது. நாம் அப்படிப் பட்ட வீறுகெட்ட சமுதாயத்தில், சின்னாபின்னமாக் கப் பட்டச் சமுதாயத்தில், சிதறிக் கிடக்கும் சமுதாயத் தில் வாழ்கிறோம். சமுதாயம் ஆட்டங்கொடுத்து ஆடு கிறது; இந்த நிலையிலே நாம் நம்மை உணர்ந்து, நம் தேவையைத் தெரிந்து, நம் சமுதாயத்தை மாற்றி அமைக்க முற்படா விட்டால் சமுதாயம் ஆடுவது தெரியாமலேயே நாம் அமிழ்த்தப்பட்டு விடுவோம். நான் கூறுவது வேடிக்கை பேச்சல்ல. நடக்காத, நடக் கக்கூடாத, நடக்கமுடியாத செயலும் இல்லை. அமெரிக் காவிலே வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் சிவப்பு இந்தியர்கள் இன்று எங்கே? அவர்களது வரலாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/15&oldid=1033254" இலிருந்து மீள்விக்கப்பட்டது