பக்கம்:புராண மதங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



15 அண்ணாதுரை எங்கே? நம் நாட்டு பழங் குடிகள் என்று கூறப்படும் தோதவர்கள் இன்று எங்கே? எப்படி வாழ்கிறார்கள்? எண்ணிப் பாருங்கள். மதம் என்பது இந்த உலக வாழ்க்கையைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. அதன் கவனமெல்லாம் மறு உலகத்தைப் பற்றியதுதான். அதுதான் அப்படி என் றால் தற்கால சமுதாய ஸ்தாபனங்களோ மக்களின் சம் தர்மத்தை அழித்து தீங்கு விளைவிப்பனவாக இருக்கின் றன். ஜாதிப் பிரிவு முறை, பாலிய விவாகம், கூட்டுக் குடும்ப நிர்வாக வழக்கம், தர்மத் திட்டம் முதலியவை யாவும் ஜனங்களின் சமுதாய முன்னேற்றத்திற்கும் தொழில் அபிவிருத்திக்கும் முட்டுக்கட்டையாயிருந்து வருகின்றன. ஜாதி முறை, சமுதாயப் பிற்போக்கிற்கும், தொழில் மந்தத்திற்கும் பிரதான காரணமாயிருக்கிறது. ஜாதி கொள்கையில் ஒருவித கேவலமான இறுமாப்பு இருக்கிறது. அதனால் சிலர் பயனற்ற கர்வங் கொள் கிறார்கள். பலர் சிறுமையையும் அதைரியமும் அடைகி றார்கள். ஆகவே இத்தகைய நிலைமையில் உழைப்புக் குள்ள உண்மை மதிப்புப் போய்விடுகிறது. அதனால் மக்கள் தொழிலத் தேடி வேலையில் அமருவதற்கு அவ சியமாகும் ஊக்கத்தை இழந்து விடுகிறார்கள். அது காரணமாக பிரதான தொழில்களில் பெரும்பாலா னவை கீழ்த்தர வகுப்பார் எனப்படுவோரிடம் விடப் பட்டுப் போகின்றன. அவர்களுக்கு அத்தகைய தொழில்களை நடத்துவதற்குப் போதிய கல்வி இருப்ப தில்லை. பொது ஜனங்களும் அப்படிப்பட்ட தொழில் களுக்கு ஆதரவளிப்பதில்லை' அவைகளை ஒரு பொருட் டாக மதிப்பதில்லை. ஆதலால் அநேக கைத்தொழில்கள் பல்லாயிர வருஷங்களுக்கு முன்பு எந்த நிலையில் இருந் தனவோ அதே நிலையில் தான் இன்னமும் இருந்து வரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/16&oldid=1033255" இலிருந்து மீள்விக்கப்பட்டது