பக்கம்:புராண மதங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை றும் உயர்தரமான மத ஏடுகளிலே, கடவுள் திருவிளை யாடல்களின் தொகுப்பாக உள்ள புராணங்களிலே காணப்படுபவை இவைகளை எப்படி நம்புவது? நம்ப முடியுமா? என்பதைக் கோபதாபமின்றி அன்பர்கள், கூற வேண்டும். 1. சிங்காரச் சோலையில் சில முனிவர்கள் அனைத் தும் துறந்து ஆண்டவனை அடைய அல்லும் பகலும் தவம் செய்துகொண் டிருக்க, அங்கொரு பெண்மான் துள்ளி விளையாட, அதைக் கண்ட முனிவர்கள் அதன் மேல் ஆசை கொள்ள, அது உடனே கருவுயிர்த்து ஒரு பெண் குழந்தையை வள்ளிக் கிடங்கில் ஈன்று விட்டுச் சென்று விட்டது . / 2. ஐந்நூறு யோசனை அகன்று நூறு யோசனை உயர்ந்த மரத்தைப் பிடுங்கி அவுணர்கள் மேல் வீசி எறிந்தார் வீராவாகு. 3. ஆயிரம் தலைகளும் இரண்டாயிரம் கை கால் களையுமுடைய சிங்கமுகாசூரன் எதிரிகளைக் கையில் எடுத்து விழுங்கினான். 4. வாளுக்கிரையான சூரபன்மன் அண்டமுகட் டைத் தொடும்படியாக உயர்ந்து பூமி உருக்கொண்டு எங்கும் நிறைந்து நின்றான். முருகன் ஏழு பாணங்களை எய்ய அவை ஏழு கடல்களாகச் சென்று அழித்தன. 5. சிங்கமுகா சூரனுடைய வயிற்றை சுப்ரமணிய ரின், அம்பு துளைக்க அதன் வழியாக லக்ஷம் வீரர்கள் தோன்றினார்கள். 8. சூரபன்மன் வேலன் படைக்கஞ்சிக் கடலின் மத்தியில் அண்ட கூடமளவும் உயர்ந்து லக்ஷம் யோசனை அகன்ற மாமரமாக நின்றான். 7. தாரகன் லட்சம் வீரர்களைப் புழைக்கையால் பிடித்துக் கட்டிக் கடலில் எறிந்தான். --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/20&oldid=1033259" இலிருந்து மீள்விக்கப்பட்டது