உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராண மதங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

புராண-மதங்கள்

புடன், பக்தகர்கள் அந்த அளவோடு நின்றுவிடவில்லை. தேவி—கேவலப் படுத்துகிறார்கள், போலீசின் பாதுகாப்பிலே வாழவேண்டிய நிலமைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்னை" என்று கூறினார்.

"கேவலப் படுத்தினர்களா! யார்! என்று தேவி ஆச்சரியத்துடன் கேட்டார்.

அவரை கேலி செய்வதுபோல கருப்பண்ணர் "யார்!" என்று ஒருமுறை கூறிவிட்டு, "நாஸ்திகர்கள் கேவலப்படுத்தினார்கள் என்று கருதுகிறீரா தேவி! அவர்களல்ல. அவர்கள் மனிதனுடன் பழகுவதும், மனிதர்களுடைய பிரச்னைகளைக் கவனிப்பதுமாகக் காலந்தள்ளுகிறார்கள். என்னைக் கேவலப் படுத்தியது பக்தர்கள்!— கைகூப்பித் தொழுது கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்களே, கற்பூரம் கொளுத்துகிறார்களே அந்த பக்தர்கள்தான், என்னை, சேச்சே, இப்பொழுது எண்ணிக் கொண்டாலும் எனக்கே வெட்கமாக இருக்கிறது கேவலப்படுத்தினார்கள்—போலீசாரின் துணையால் நான் மீட்கப் பட்டேன்," என்று கூறினார். தேவிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

"கருப்பண்ணரே! என்ன பேசுகிறீர் பக்தர்கள்-ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத பேச்சாக இருக்கிறதே" என்றார்.

"தேவீ, கேள் இந்த விஷயத்தை இந்த பக்தர்களை இன்னின்னது செய்யுங்கள் என் மனமகிழ்ச்சிக்காக, இன்னின்னது படையுங்கள் என்று நான் கேட்டதுமில்லை—அவர்களாகவே வருகிறார்கள்— அவரவர்கள் மனதிற்குத் தோன்றியபடி ஏதேதோ செய்கிறார்கள். நான் சிவனே! என்று எல்லாவற்றுக்கும் ஈடு கொடுத்துக்கொண்டிருக்கிறேன். என் பொறுமை, பெருந்தன்மை இவைகளைக் கண்டு, இந்த பக்தர்கள், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிக்கொண்டு ....." கருப்பண்ணரின் தொண்டை அடைத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/25&oldid=1697318" இலிருந்து மீள்விக்கப்பட்டது