பக்கம்:புராண மதங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



26 புராண மதங்கள் "அலிகார் பூட்டு வேண்டுமா? என்று கேட்கிறான் இன்னொருவன். இவ்வளவு கூச்சல், துணிபு! பேட்டுப் பூட்டுங்க பார்க்கலாம், எவன் வந்து என்ன செய்து விடுகிறான்... என்று கூவி, தேவீ! என்னை ஒரு பெரிய அறையிலே போட்டு பூட்டிவிட்டு போயேவிட் டார்கள். வெளியே சிரிக்கிறார்கள் - இனி பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று ! நான் உள்ளே அடைபட்டுக் கிடக் கிறேன்... என்னைப் போட்டு பூட்டிய 'பாவிகள்' சிரிக்கி றார்கள் ! நான் கேட்கலாமா அவர்களைப் பார்த்து, இதென்ன அக்ரமம் - திறந்து விடுங்கள் என்னை - உல்லை யானால் மூக்கிலும் வாயிலும் இரத்தம் வரச்செயவேன், கைகால்களை முறித்துப் போடுவேன்" - என்று பேச லாமா ! அவர்களோ பக்தர்கள் ! நானோ அவர்களால் வணங்கடும். சாமி! தேவீ! மனம் எவ்வளவு பதறி இருக்குமென்று யோகியுங்கள்" - என்றார் கருப்பண் ணர். கருப்பண்ணரே! அது கிடக்கட்டும். ஏன் பூட்டி னார்கள் ...... என்ன செய்தீர் என்று கேட்டார் தேவி யார். கருப்பண்ணர் சிரித்துவிட்டு, "நானா, என்ன செய்தேனோ, அவர்கள் என் எதிரே இருந்துகொண்டு சொல்லி வந்த புளுகுகளையெல்லாம் கேட்டுச் சகித்துக் கொண்டிருந்தேனே, அதுதான் நான் செய்த தவறு. போதும் புளுகாதீர்கள் என்று ஒரு தடவையாவது ஒரு பக்தனையாவது கண்டித்திருந்தால, அவர்களுக்கு அன்று எவ்வளவு துணிவு வந்திருக்காது என்றார் கருப்பண்ணர். "உன்னை ஒரு தனி இடத்தில் போட்டுப் பூட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது?" என்று மீண்டும் கேட்டார் தேவியார். சலிப்பும் வெறுப்பும் கலந்த குரலிலே கருப்பண் ணர் சொன்னார், என் பூட்டி வைத்தாகள் என்றா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/27&oldid=1033266" இலிருந்து மீள்விக்கப்பட்டது