பக்கம்:புராண மதங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை நீங்கள் யாரடா , தடுக்க - எங்க கருப்பண்ண சாமிக்கு நாங்கள் உற்சவம் நடத்துகிறோம் - உலா முடிந்தது, கொலு முடிந்தது - கொண்டு போகிறோம் கோயிலுக்கு - நீங்கள் யார் தடுக்க? என்று கருப்ப பக்தர் கோஷ்டி பதில் கூறிற்று. "தொடாதே!' - என்று அதட்டிப் பேசினார் பிச்சை பக்தர் கூட்டத்தினர். தூக்கு தூக்குடா!" என்று அதிகாரக் குரலில் பேசினர் கருப்ப பக்த கோஷ்டியினார் . வெளியே கிளம்பினே - கொலை விழும் - ஆமாம். சூரப்புலிகளோ! தூக்குடா சாமியை" "வேண்டாம் - வீணா தொல்லைப் படாதீங்க. "கருப்பண்ணசாமியை நாங்க எங்க இஷ்டப்படி தூக்கிக்கிட்டுப் போவோம். கருப்பண்ண சாமி எங்க சாமிடா! "இல்லே, எங்க சாமிடா கருப்பண்ணசாமி" கையை வெட்டிவிடுவேன். "காலை ஒடித்து விடுவோம்." தேவி! இரு பிரிவும் இப்படி கொக்கரித்தன - நான் மண்டபத்திலே கொலுவிருக்கிறேன் ! என்னைக் கொண்டு போய் பழையபடி கோயிலில் சேர்த்து விட வேண்டும் என்று ஒரு பிரிவு முயற்சி செய்கிறது - இன் னொரு பிரிவு, கூடாது என்று கூறித் தடுக்கிறது. நான் என்ன செய்வது! இரு பிரிவினரும் என் பக்தர்கள் ! நான் யார் பக்கம் சேரமுடியும்? இரண்டு பிரிவும் சண்டை போட்டுக் கொள்ளட்டும், நாம், கோயிலுக் குப் போய்த் தொலைப்போம் - இரு பிரிவின் தயவும் வேண்டாம், என்று எண்ணம் பிறந்தது - ஆனால் எப் படிக் கோயிலுக்குப் போவது! நான் திண்டாடிப் போனேன், தேவி திகைத்துப் போனேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/30&oldid=1033269" இலிருந்து மீள்விக்கப்பட்டது