உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராண மதங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

புராண-மதங்கள்

"டோய் சாமி, உள்ளே இருக்குடா—பூட்டிப்பூட்டான்க" என்று கூவிக் குதிக்கிறார்கள்.

"பாவம், கருப்பண்ணசாமியைப் போட்டு பூட்டிவிட்டான் என்று தாய்மார்கள் முகவாய்க்கட்டையில் கைவைத்தபடி பேசுகிறார்கள். நான் உள்ளே சிறை வைக்கப்பட்டேன் என்னை இந்த கதிக்கு ஆளாக்கிய கருப்ப பக்தர், என்னைச் சிறைமீட்க அரும்பாடுபடலானார், "இந்துமத பரிபாலன போர்டார்" அவர்களிடம் முறையிட்டாராம்.

"சாமியை மண்டபத்திலே போட்டு பூட்டிவிட்டார்கள்—கோயிலிலே சாமிஇல்லை—சாமியை வெளியே கொடுக்கவேணும்"னு கேட்டாராம். போர்டார் இதுக்கா இருக்காங்க! ஏதோ கணக்கு வழக்கு சரியா இருக்கா இல்லையான்னு பார்க்கத்தானே அந்தக் காரியத்தை ஒழுங்காச் செய்யவே அவர்களுக்கு நேரம் போதறதில்லே என்னைப் போட்டு பூட்டிவிட்டா, அதற்காக ஓடோடியா வருவாங்க! போப்பா! போயி, போலீசிலே சொல்லுன்னு யோசனை கூறிவிட்டாங்க. ஓடி இருக்கிறார் போலீசுக்கு. நான் உள்ளே அடைப்பட்டுக் கிடக்கிறேன். போலீசிலே என்னென்ன பேசினாங்களோ தெரியல்லே! என்ன பேசியிருக்கபோறாங்க, கேலிதான்! கடைசியிலே லால்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒரு போலீஸ் படையோடு வந்து, பூட்டை உடைத்து, என்னை வெளியே விட்டார். அந்த நல்ல மனுஷன் இந்த உபகாரம் செய்ய வந்தாரே, அவரை சும்மா விட்டாங்களா, "எப்படி பூட்டை உடைக்கலாம்—பார், என்ன செய்கிறோம் எங்க கருப்பண்ணசாமியை நாங்க பூட்டிவைக்கிறோம் மாட்டிவைக்கிறோம்—எங்க இஷ்டப்படி செய்கிறோம், நீ யார் கேட்க பூட்டை உடைக்கலாமா?" அப்படி இப்படின்னு, அவரைச் சூழ்ந்து கொண்டாங்க. அவர் என்ன என்னைப் போலவா, வாயை மூடிகிட்டு கிடப்பாரு மரியாதையா நடங்க. சட்டப்படி நடக்கவேணும்னு சொல்லியிருக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/33&oldid=1697481" இலிருந்து மீள்விக்கப்பட்டது