அண்ணாதுரை
33
காரு கேட்கில்லே. போலீசாரைக் கூப்பிட்டாரு. போடுங்கடா பூஜைன்னு உத்தரவு போட்டாரு, தூக்கினாங்க தடியை. அடிச்சி விரட்டினாங்க. தேவி! அப்பத்தான் என் மனம் கொஞ்சம் நிம்மதியாச்சி. பக்தனுங்கன்னு பேர் வைத்துக்கொண்டு, என் எதிரே கன்னம் கன்னம்னு போட்டுக் கொண்டு, கற்பூரம் கொளுத்திக் காட்டிக்கிட்டு இருக்கிறவங்க. நீதி நியாயத்தைக் கவனிக்காமல் ஈவு இரக்கம் காட்டாமல், பழி பாவத்துக்கு அஞ்சாமல் சாமியை இந்த அலங்கோலப் படுத்தலாமான்னு. யோசிக்காமே, நெஞ்சழுத்தத்தோட, என்னைப் போட்டு பூட்டி விட்டாங்க கேவலப் படுத்திவிட்டாங்க. நான் என்ன செய்ய முடிந்தது? எந்தப் புண்யவான் வந்து வெளியே விடுவாரோ எத்தனை காலம் இங்கே அடைபட்டுக் கிடக்க வேணுமோ எவனெவன் கேலி செய்கிறானோ—ன்னு எண்ணி எண்ணி ஏக்கப் பட்டுக்கொண்டிருந்தேன் நல்ல வேளையா லால்குடிக்காரர், தங்கமான மனுஷன், அவர் புள்ளெ குட்டிக சுகமா இருக்க வேணும், என்னை வந்து வெளியே கொண்டு வந்து சேர்த்தாரு தேவி! இந்தப் பாடுபடுத்தி விட்டாங்க பக்தர்னு சொல்லிக் கொள்ளுகிறவங்க. அதனாலேதான் எனக்கு பயம் ஏற்பட்டு விட்டது. நிஜமாகச் சொல்கிறேன், இனி இந்த பக்தர்களை நம்பிப் பிரயோசனமில்லே ஏதோ பூஜை செய்கிறாங்களேன்னு பூரிப்படையறதிலே அர்த்தமில்லே. இனி நமக்கு அவங்க தயவு வேண்டாம் சாகவாசமே கூடாதுன்னு தோணிவிட்டது" என்று கருப்பண்ணசாமி. தங்கதையைக் கூறி முடித்தார். தேவியும் கதையைக் கேட்டுக் கலக்க மடைந்தார்கள்.
"ஆமாம்! இனி இந்தப் பக்தர்களை நம்பக்கூடாது" என்று தேவியும் தீர்ப்பளித்தார்கள்.
"நாம் இரண்டு பேரும் மட்டும் தீர்மானித்தால் போதுமா தேவி! நம்ம கூட்டம் பெரிதல்லவா? எல்லோருக்கும் எடுத்துச் சொல்லி, இனி இந்தப் பக்தர்களிடம்