உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராண மதங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

புராண-மதங்கள்

நாம் சிக்கிச் சீரழிவு படக்கூடாது. பக்தர்கள் வேண்டாம்" என்று தீர்மானம் நிறைவேற்றினால் தானே நல்லது என்றார் கருப்பண்ணசாமி.

"ஆமாம். கருப்பண்ணரே! பக்தர்களால், நம்மவர்களுக்கு ஏற்பட்டு வரும் சீரழிவுகளையும், எத்தர்கள் ஏமாளிகளை ஏய்க்க நம்மைக் கருவியாகக் கொள்வதையும் விளக்கமாகக் கூறி, நமது நண்பர்களுக்கும் இனி இப்படிப்பட்ட இடைஞ்சல் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளத்தான் வேண்டும். நாம் இதற்காக ஒரு தனி மாநாடு கூட்டிவிட வேண்டியது தான். இனிப் பொறுக்க முடியாது. நான் வரவேற்புக் கழகத்துக்குத் தலைமை தாங்கி விடுகிறேன். திறப்பு விழா நீ நடத்தி விடு தலைமைக்கு யாரை அழைக்கலாம்—" என்று தேவியார், ஆர்வத்துடன் கேட்டார்கள்.

[லால்குடிச் சமீபத்தில் உள்ள புஞ்சை சாங்குடி என்ற கிராமத்தில், இரு கட்சிகள் ஏற்பட்டு, கருப்பண்ணசாமியை மண்டபத்தில் போட்டு பூட்டிவிட, போலீஸ் உதவியுடன் பூட்டு உடைக்கப் பட்டு, சாமி கோயிலில் கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டார் என்ற செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில், 51 ஆகஸ்ட்22ல் வெளிவந்தது. அந்த உண்மைச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு தீட்டப்பட்டது இந்தக் கற்பனை.]

🞸🞸

"மீனாட்சி! எதற்காக இப்படிக் கோபங் கொள்கிறாய்? காமாட்சி! நான் கொஞ்சுவது உன் காதிலே விழவில்லையா? நீலாயதாட்சி! நீ இப்படி இருந்தால் என் மனம் நிம்மதி யடையுமா? அகிலாண்டேஸ்வரி! நான் உனக்குத் தவறென்ன செய்தேன்! அம்பிகே! இப்படிப்பார். தியாகவல்லி! திரும்பிப் பார். திரிபுரசுந்தரி......" என்று சரசமாடும் சத்தம் கேட்டது. இது யார், அர்த்த ராத்திரியிலே அநேக ஸ்திரீகளின் பெயரை அழைப்பது என்று பார்த்தேன். ஆலவாயப்பன், சொக்கன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/35&oldid=1697468" இலிருந்து மீள்விக்கப்பட்டது