36
புராண-மதங்கள்
மூர்க்கத்தனமாக ஜெர்மானியர் தாக்கும் அந்தப் போர்க்களத்திலே, எதிரிகள் சுரங்க வெடிகளை ஆங்காங்கு அமைத்து வைத்திருந்தனர். நேசநாட்டுப் படையினரின் ஒரு பிரிவினர் இந்தச்சுரங்க வெடிகளை அப்புறப் படுத்தும் அபாயகரமானவேலையிலே ஈடுபட்டனர், அச்சமயத்திலே, ஒரு நாயக், சுரங்கவெடி ஒன்றின் மீது இடறவே, தீப்பிடித்தது, தீர்ந்தது மறுவிநாடி குண்டு வெடிக்கும், அந்த இராணுவ உத்தியோகஸ்தரின் உடல் சுக்குநூறாகிவிடும் அவரோ அதைத் தெரிந்துகொள்ளவில்லை. மரணம் தன்னை தொட்டு இழுப்பதைத் தெரிந்துகொள்ளவில்லை. என்ன நடந்ததுதெரியுமா! வீரா! பண்டைப்பெருமையுள்ள தமிழ் மகனொருவன், அங்கு இருந்தான்! கண்டான் காட்சியை! மிரண்டானில்லை. நமக்கென்னவென்று சும்மா இருக்கவில்லை, நாயக், விலகு, ஓடு, பிழை, சுரங்கவெடி! என்று கூவிடவுமில்லை. ஒரு விநாடியும் தாமதியாது பாய்ந்தான், குண்டின்மீது! அதனைக் கட்டிப் பிடித்தான். குண்டு வெடித்தது. அவன் உடல் சின்னாபின்னமாயிற்று. உயிரிழக்க இருந்த உத்தியோகஸ்தன் தப்பினான். வீரன் மாண்டான், வெற்பென்று ஓங்கிற்று அவன் புகழ் தன்னுயிரை விட்டேனும் மற்றொருவன் உயிரைக் காப்பாற்றும் தமிழ்ப் பண்பு, ஆபத்து நேரத்திலே அஞ்சா நெஞ்சம் கொள்ளும் ஆண்மை, தமிழருக்கு உண்டு, என்பது காசினோ களத்திலே சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இச் சம்பவத்தால் உலகுக்கு விளக்கப்பட்டது. வீரத் தியாகம் புரிந்த அவன், எங்கள் ஜில்லாவாசி! அதை எண்ணும்போதே, புன்னகையும் கண்ணீரும் கலந்து வருகிறது. செங்கற்பட்டுக்கடுத்த வாலாஜாபாத் என்ற நகருக்குப் பக்கத்திலே உள்ள குக்கிராமவாசி, கடல் கடந்து சென்று, காசினோகளத்திலே தமிழ் மரபினை உலகுக்கு உணர்த்துவித்தான். அவன் பெயர் சுபேதார் சுப்பிரமணியம். எதிரியின் படைவரிசைக்குப் பின்புறம், விமான மூல-