உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராண மதங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாதுரை

37

மாகச் சிறுபடையை இறக்கி, எதிரியைத் தாக்கும் புதியதோர் போர் முறையைப், பர்மா போரிலே செய்து காட்டிய ஜெனரல் விங்கேட் என்பவர், விமான விபத்தினால் இறந்து போனார். அவருடைய ஆற்றலையும், ஆண்மையையும், பரிதாபகரமான முடிவையும் உலகம் உணர்த்திடுவது போலவே, சுபேதார் சுப்பிரமணியத்தின் வீரத் தியாகத்தைப் பற்றி வியந்துரைக்கிறது. வீரர் தோட்டத்தின் விளக்கு சுடர்விட்டெரிகிறது. இத்தகைய சுடரொளி கண்டு சுதந்திர தேவி, தனக்குரிய கோயில் இதுவே என்று பூரிப்பாளே யொழிய, சொல்லம்பரின் வெல்லப் பேச்சுக்கு மகிழ்ந்துவிட மாட்டாள். சுபேதார் சுப்பிரமணியம் போன்ற தியாகிகளைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும், படிப்பதும், கேட்பதும், வீரத்தை, பண்பை , தமிழரின் பெருமையை ஊட்டுமே! அதைவிடுத்து, வீணரைப் பற்றிப் பேசுவானேன். பார்வதியும் பரமசிவனும் பாதிராத்திரி வேளையிலே, என்ன பேசிக்கொண்டால் நமக்கு என்னப்பா!" என்று நான் கூறினேன். வீரன் சில விநாடி ஆழ்ந்த யோசனையிலே இருந்துவிட்டு, "பரதா! நீ கூறிய சம்பவம் உண்மையிலேயே, தமிழர்கள் யாவரும் பெருமையுடன் உலகை நோக்கி நின்று, "உணரப்பா தமிழ் வீரத்தை!" என்றுரைக்கக்கூடிய வீரச் செயலே. அதற்கோர் ஆட்சேபனையுமில்லை. அவைபோன்ற வீர சம்பவங்களைக் கேட்டு நான் பெருமை கொள்ளாமலுமிருப்பதில்லை. கீர்த்திக் கணவாயிலே புகுந்த சுபேதார் சுப்பிரமணியத்தின் புகழ் தமிழகம் எங்கும் தெரியச் செய்வேன் இது உறுதி" என்று கூறினான். நானும் மகிழ்ந்தேன். மேலும் சில கூற எண்ணினேன். வீரனோ, "என் கதையைக் கேள். பார்வதியிடம் பரமசிவம், இவ்வாறு பேசிடக் கேட்ட நான்....." என்று பழைய பல்லவியைத் தொடங்கினான். "என்ன வீரா! பார்வதியும் பரமசிவனும் பேசுவதும், நீ பக்கத்திலே இருந்து கேட்பதும், இதுதானா விஷயம்? யார் இதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/38&oldid=1697473" இலிருந்து மீள்விக்கப்பட்டது