அண்ணாதுரை
39
ஏன் மனஸ்தாபம் என்று கேட்கிறீரே, ஏன் இராது கோபம்? ஒரு மனைவியின் காதிலே தனது கணவனைப் பற்றிப் பலபேர் தூஷித்தால் மனைவியின் மனம் புண்படாதா? உமக்கென்ன, உலகத்தார் என்ன வேண்டுமானாலும் உரைக்கட்டும் கவலையில்லை என்று இருக்கிறீர். என்னால் முடியவில்லையே" என்று கூறிவிட்டுக் கண்களைத் துடைத்துக்கொள்ளவே, கபாலி கண்களை அகலத் திறந்து, "பார்வதி! யார் என்னைப் பற்றி இழித்தும் பழித்தும பேசினார்கள்? சொல் சீக்கிரம், அவர்களைப் படுசூரணமாக்குகிறேன்" என்று வெகுண்டுரைத்தார். "நீரே நேரடியாகப் பாரும் கண்ணால் உமது காதினால் கேளும் உம்மை யாரார் என்னென்ன கூறி நிந்திக்கிறார்கள் என்பதை" என்று கூறி காமாட்சி, பரமசிவத்தை மேல் மாடிக்கு அழைத்துச் சென்றிடவே, நானும் மெள்ள ஓசை படாமல், அவர்கள் கண்களுக்குத் தெரியாமல் மேல் மாடிக்குச் சென்றேன். பொலிவுடன் விளங்கிய பூரணச் சந்திரன், மாசு மருவற்ற வானத்திலே நட்சத்திரங்கள் பல சூழ இருக்கக் கண்ட பரமசிவன், "பிரியே! அதோ பார்! அழகிகள் பலர் புடைசூழ அரசிளங்குமரி உலவுவதுபோலச் சந்திரன் காட்சி அளிப்பதை. இந்த நேரத்திலே நிலவொளியிலே, நீயும் நானும், யாரோ எதற்கோ நிந்திப்பதைப் பற்றிப் பேசுவதைவிட ....." என்று கூறி முடிப்பதற்குள் பார்வதியார், அதோ பாரும், என்று ஒரு காட்சியைக் காட்டினார், பூலோகத்திலே! நானும் பார்த்தேன், பரமசிவனும் பார்த்தார்! பூலோகத்திலே எங்கோ ஓர் இடம் அது. மக்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டும், ஒருவரை ஒருவர் இழுத்துக்கொண்டும், நீர்புரளும் கண்களும், பதறும் உடலும், திகில் தோய்ந்த மனமும் கொண்டவர்களாய் காடு மலை கடக்கக் கண்டேன். "காமாட்சி! இது என்ன காட்சி," என்று கேட்டார் பரமசிவன். "காட்சியைக் கண்டீரா? சரி, அவர்கள் பேசுவதைக் கேளும்" என்று