பக்கம்:புராண மதங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புராண - மதங்கள் அம்மையார் உரைத்தார். கோரமான அக்காட்சியைக் கண்ட எனக்கு அவர்களின் வார்த்தையும் கேட்டது. அட ஆண்டவனே! உனக்குக் கண்ணில்லையா? உன் நெஞ்சம் கல்லா? இப்படி எங்களைத் தவிக்கவிடும் உனக்குத் தயாபரன் என்றுபெயரா? உனக்குக் கோயில் கட்டிய கரங்களைக் கொண்டு இன்று என்ன செய்வது என்று தெரியாமல் பிசைந்துகொள்கிறோமே, உனக் குக் கருணை யில் லயா? உன் கோயிலை வலம் வந்த கால்கள் இன்று, காடுமேடு சுற்றி, உயிர் பிழைக்க ஒரு இடம் கிடைக்காதா என்று ஓடத்தானே பயன் படுகிறது. எங்கள் ஓலம் உன் செவிக்கு எட்டவில்லையா? உனக்குத் திருவிழாக்கள் நடத்தி, கோயில் வெடிச் சத்தத்தைக் கேட்டு ஆனந்தித்த காதுகளிலே பீரங்கி வேட்டுச் சத்தம் விழுந்து துளைக்கிறதே, உமது மனம் இளகாதா? என்று அந்த மக்கள் கதறினர். யார் அவர்கள்? ஏன் அப்படி அழுகிறார்கள்? என்று கேட்கத் துடித்தேன், ஆலை என்னை நானே அடக்கிக் கொண்டேன். நான் பேசினால் நான் இருப்பது தெரிந்துவிடுமே என்ற பயத்தால். நான் கேட்டறிய எண்ணியதை அறிந்தவர் போல பார்வதியார் மேலும் பேச ஆரம்பித்தார். "அந்த இடம் இம்பால் நகரம்! கிராமமக்கள் ஜப்பானியரின் கரத்திலே சிக்கிச் சீரழியக் கூடாது என்பதற்காக ஊரைவிட்டு அகதிகளாகி இம்பாலை நோக்கி இடர் மிகுந்து செல்கின்றனர். கண்ணில்லையா என்று உன்னைக் கேட்கின்றனர் அதன் சுருக்கம் குருடா நீ என்பது! மனம் இரும்பா என்று கேட்கின்றனர். நாதா ! இதைப்போல மட்டுமல்ல, இன்னும் கடுமையாக ஏசிப் பேசினார்கள், முன்பு வங்காளத்திலே பட்டினியால் மாண்ட பரிதாபத்துக் குரிய மக்கள், அதைப் போலவே பழித்துப் பேசினார் கள். பஞ்சம் பிணி மிகுந்த பல்வேறு இடங்களிலே, குருடன், ஈரமற்ற நெஞ்சினன், கொடுமை புரிபவன், ஏழைகளை ரட்சிக்காதவன் என்றெல்லாம், கணவனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/41&oldid=1033280" இலிருந்து மீள்விக்கப்பட்டது