பக்கம்:புராண மதங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை பற்றிப் பிறர் பேசிடக் கேட்டால் மனைவியின் மனம், என்ன பாடுபடும், அதை உத்தேசித்தாவது. நீர், இந்த மக்களுக்கு ஏற்பட்ட அவதியைப் போக்க வேண் டாமா? முடியவில்லையானால், அதையாவது அவர்க ளிடம் சொல்லிவிடவேண்டாமா? கண்ணெடுத்துப் பாராமலும், காது கொடுத்துக் கேளாமலும், கைலாய வாசமும் எனது நேசமும், நாரதகானமும் நந்தியின் மிருதங்கமும், கங்கையின் சல்லாபமும் மற்றச்சுக போகமுமே போதும் என்றிருக்கலாமா" என்று கேட்டார். அம்மையின் பேச்சு ஐயனுக்குக் கோபமூட் டும் என்று நினைத்தேன். சக்தியின் பேச்சு சிவனுக்குக் கோபமூட்டவில்லை. விஷயத்தைச் சாவதானமாக உவவிக்கொண்டே விளக்கலானார். "பார்வதி! பூலோகத் திற்கு நான் தரவேண்டியது அனைத்தையும் தந்தாகி விட்டது. செய்ய வேண்டியது அனைத்தையும் செய்தாகி விட்டது. இனி என்னால் ஆவது ஒன்றுமில்லை" என்று கூறினார். பார்வதியார் வேகமாக அவர்பின் சென்று, தோளைப் பிடித்துக் குலுக்கி "பேஷ்! செய்ய வேண்டிய தெல்லாம் செய்துவிட்டீரா? நன்றாக இருக்கிறது உமது நியாயம்? கேட்பாரில்லாததால்' எதை வேண்டு மானால் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற துணிபு பிறந்துவிட்டது உமக்கு" என்று கேட்டாள். என்மனதிலே அதேபோது அதே எண்ணந்தான் குதித்தது சிவபெருமான் (சிவகாமி சீற்றத்தைவிடு ! நான உலகைப்படைத்தேன் ! உயிரை படைத்தேன்! உயிர்வாழ வகையும் படைத்தேன்! கவர்ச்சிமிக்க காடுகளைப் படைத்தேன் , கனிமரச்சோலை களைப்படைத்தேன் , கானாறுகளை உண்டாக்கினேன், காற்றையும் நெருப்பையும் கடமையைச் செய்க என்று ஏவினேன். வற்றாத ஆறுகளையும் வளமுள்ள நிலத்தை யும் வழங்கினேன். மக்களின் சுகபோகத்துக்கான சகல பதார்த்தங்களையும் அளித்தேன். கடலைப் படைத்தேன் கடலைக் கடக்கக் கலமும் தந்தேன். கடலிலே முத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/42&oldid=1033281" இலிருந்து மீள்விக்கப்பட்டது