பக்கம்:புராண மதங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புராண - மதங்கள் - - - - நீ கோயில் கொண்டிருக்கும் ஸ்தலங்களுக்கெல்லாம் திரள் திரளாகச் செல்கின்றனரே" , "மதியீனர்களின் மனமருள், அது. அதைத் துணை கொண்டு மந்தகாச வாழ்வு நடத்துகின்றனர் புரோகித வகுப்பார் | "அர்ச்சகர்களையும், ஆலயப் பணியாட்களையும் அமர்த்தியுள்ளனரே "அவர்கள் வாழ! என் தேவைக்காக அல்ல! "தேவ பூஜைக்கு என, கீதமொழிக் குயில்களையும் ஆடலழகிகளையும், ஆலயங்களிலே நியமித்துள்ளனரே "ஆள் சேர்க்க, எனக்குத் தொண்டு புரிய அல்ல மன்னாதி மன்னர்களையும் மண்டியிட வைக்கும் மகத்துவம் உள்ள மகேஸ்வரன் என்று கூறினரே" முடியுடை வேந்தரை மதியுடைக் கயவர் மடக்கி யது, அந்த மயக்க மொழி பேசித்தான் உரையாடல் முடிந்தது. பார்வதியாருக்குக் கேள்வி வறண்டுவிட்டது. பரமசிவத்துக்கோ பேச்சி நிற்கவில்லை. பார்வதி! என்னைக் கல்லாக்கிச் செம்பாக்கினர் கயவர் கள், இவ்வளவு நலன்களைத் தந்த என்னைக் கல்லாக் கினர், செம்பாக்கினர். தகுமா அது? என்னைப்பற்றி, அருவருக்கத்தக்க ஆபாசம் நிறைந்த கதைகளைக் காமக் கூத்துகளை எழுதி வைத்தனர். அறிவுள்ள வரின் சிந்தனை என்னென்ன எண்ணுகிறது தெரி யுமா? அன்பே! நான் பக்தனிடம் சென்று அவன் மனையாட்டியை என் பின்னேடு அனுப்பச் சொன்னே னாம். எழுதலாமா, இதுபோலக் கதை. எழுதித் தொலைத்தார்களே, அறிவு வளர வளர, இத்தகைய ஆபாசக் கதைகள் வேண்டா மென்று ஒதுக்கி விட வேண்டாமா? நான் மற்றொரு பக்தனிடம் சென்று பிள்ளைக் கறி கேட்டேனாம், வேறோர் பக்தனின் கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/45&oldid=1033284" இலிருந்து மீள்விக்கப்பட்டது