பக்கம்:புராண மதங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை களைப் பெயர்த்தேனாம், வில்லடி பட்டேனாம், கல்லடி பட்டேனாம், பிரம்பாலடி பட்டேனாம், பன்றிகளை மந்திரிகளாக்கினேனாம், தாசி வீட்டுக்குத் தூது சென்றவனாம் நான், தேவி! கேள் இந்த அக்ர மத்தை, நான் சுந்தரன் என்ற பக்தனுக்காகத் தாசி வீட்டுக்கு தூது சென்றேனாம், எழுதலாமா இது போன்ற கதைகளை? என்ன செய்வது, இப்படி என்னை நிந்திக்கும் கயவர்களை? என் பெயரைக் கூறி மக்களை ஏய்க்கும் புலவர்களை" என்று பரமசிவன் கேட்டார். என்ன செய்வதா? ஏன் இழுத்து வந்து, ஆளுக்கு ஆறாறு மாதம் சுயமரியாதைப் பள்ளியிலே படிக்கச் சொல்வது தானே" என்று சொல்லி விடத்தான் வேண் டும், என்று தோன்றிற்று. இதற்குள் பார்வதியார், "பிரபோ! தங்கள் பேச்சைக் கேட்ட பிறகு எனக்குப் பித்தம் தெளிந்தது. நீர் என்ன செய்வீர் ? மக்கள் தங்களைத் தாங்களே பாழாக்கிக் கொள்கின்றனர், நம் மையும் இழிவாக்கி விட்டனர், மதி வளருவது தவிர அவர்கள் மீள வேறு மார்க்கம் இல்லை" என்று கூறி விட்டு, நேரமாகிறது, தூக்கமும் வருகிறது. என்றார், அதே சமயத்திலே, "நேரமாகிறது எழுந்திரு" என்று கூறி, என் முதுகைத் தம்பி தட்டக் கண்டு, விழித் தேன், கைலாயத்தில் நடைபெற்ற உரையாடலைப் பற்றிய கனவும் கலைந்தது என்றான் வீரன். சரியான கனவுதான் கண்டாய்! இதைப் போய்ப் பெரிய பிரமாதமாகக் கூற வந்து விட்டாயே" என்று நான் கேலி செய்தேன். பரதா! கூறினது மட்டு மல்ல, இது இந்தக் கிழமை பத்திகையிலே வெளி வந்தாக வேண்டும் என்று வற்புறுத்தினான் வீரன். 'உனக்கு வேறு வேலை கிடையாது போ! கன விலே கைலாயம் சென்றானாம், பார்வதி பரமசிவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/46&oldid=1033285" இலிருந்து மீள்விக்கப்பட்டது