பக்கம்:புராண மதங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புராண - மதங்கள் பேசினதைக் கேட்டானாம் இதை யெல்லாம் பத்திரிகை யிலே போடுவதா? நல்ல வேலை' என்று நான் மறுத் தேன். விட்டானே ஒரு வெடி குண்டு, வீரன் ! "அதுசரி, பரதா! நான் கனவு கண்டால், அது கவைக்கு உதவாது என்று கருதுவாய். இதுவே ஒரு ஐயர் கனவாக இருந்தால் அது அருள்மொழியாக விடும், பத்திரிகைகளிலே பக்கம் பக்கமாக இடம் பெறும்" என்றான். "அப்படி ஒரு பத்திரிகையும், யாராரோ ஏதேதோ கனவுகள் கண்டால் வெளியிடாது" நான் பத்திரிகை நடத்தும் முறைபற்றி விளக்கினேன். "உனக்கு மறதி அதிகம்!" என்றான் வீரன். 'எனக்கா?' என்று கேட்டேன். ஆமாம் என்று கூறிவிட்டு, பலபேருடைய கனவுகள் புராணங்கள் என்ற பெயரிலே இன்றும் நாட்டிலே உலவி மக்களால் நம்பப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது. பாதா ! நான் அதைக்கூட ஆதாரமாகக் காட்டவில்லை. உன்னுடைய ஒன்றேகாலணா பத்திரிகையைத் தள்ளு, பிரம்மஸ்ரீகள் நடத்துகிற, பெரிய மூலதனமுள்ள, வளமான வரு வாயுள்ள பத்திரிகையிலே, இதுபோன்ற கனவுகள் வெளியிடப்பட்டு, வாசகர்களின் மனதிலே நுழைக்கப் படுவதை நீ அறிவாயா? இரண்டே உதாரணம் கூறுகி றேன் கேள் காந்தியார் பிர்லா கனவிலே தோன்றி பணம் கேட்டாராம், அது பத்திரிகையிலே வந்ததப்பா! சாதாரணமானவரல்ல அதற்கு ஆசிரியர், மகாத்மாவின் மகன் இருக்கிறாரே தேவதாசர், நம்ம ஆச்சாரியரின் மரு மகன், அவரை ஆசிரியராகக் கொண்ட பத்திரிகையிலே "கனவு" வெளி வந்தது. கனவாக மட்டும் இல்லை அது. காசும் கிடைத்தது. அந்தக் கனவு கண்டதும், அந்தக் கோடீஸ்வரர், நிஜமாகவே பணமும் தந்தாராம் காந்தியாருக்கு. சந்தேக மிருந்தால் இந்துஸ்தான் டைம்ஸ் என்ற டில்லி பத்திரிகையைப்பார், ஆங்கிலப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/47&oldid=1033286" இலிருந்து மீள்விக்கப்பட்டது