பக்கம்:புராண மதங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புராண - மதங்கள் ஆறு காலுடைய எருமைக் கன்று, மூன்று கண் ணுடைய மாடு, ஆண் பெண் இல்லாது அலியாக இருக்கும் கோழி, இருபக்கம் தலையுள்ள பாம்பு, கிளை களை உடைய பனைமரம் இன்னும் இதுபோன்ற பல வற்றை இயற்கையின் விசித்திரம் என்பர், இயற்கைக்கு இவை மாறுபட்டிருக்கிற காரணத்தால். சிவலிங்கம் சாட்சி சொல்வது, எலும்பு பெண்ணுரு வாவது, பனை ஓலத்துண்டு வெள்ளத்தை எதிர்த்துச் செல்வது, கருங்கல் பாறை மிதப்பது, நரி பரியாவது, அறுத்த கறி சமைத்த பிள்ளை உயிர் பெற்று எழுந்து வருவது, பன்றியும் அன்னமும் அடிமுடி தேடுவது, ஒருவர் முதுகில் பிரம்பால் அடித்ததும் அனைவர் முதுகி லும் அடி விழுவது, யானை கதறினதும் ஆண்டவன் வருவது, சிலந்தி பந்தல் போடுவது, சிவனாரைப் பூஜித்த யானை சிவபதம் அடைவது போன்றவைகள் எங்கும் எக்காலத்திலும் நிகழ்ந்திருக்க முடியாத கட்டுக் கதை கள் - அண்டப் புளுகுகளே யாகும்.) அந்தந்த மதவாதிகள், தங்கள் தங்கள் சமயங் களுக்கு ஆள் சேர்க்கவும், அவ்வாறு சேர்த்த பேர்களை ஏமாற்றிச் சுகஜீவிகளாகக் காலங் கழிக்கவும் செய்து வைத்த தந்திரோபாயங்களே யாகும். இவை யனைத்தும் காட்டு மிராண்டிக் காலத்துக் கருத்தோவியங்களாகும். இந்தக் குருட்டுப் போக்கு, இந்த நாட்டில் மட்டு மன்று, எந்த நாட்டிலும் ஓர் காலத்தில் மக்களிடம் இருந்துதான் வந்திருக்கிறது. இந்த இழிந்த நிலை - இருண்ட மதி- மற்ற நாடுகளில் எல்லாம் மாறி, அறிவுக்குகந்த புதிய போக்கு ஏற்பட் டுப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. அங்கு படித்தவர்கள், பழைமைக்கு மெருகிட்டுப் பளபளப் பாக்கி, காலத்தால் கவர்ச்சி இழந்து போன கருத்துக்களுக் கெல்லாம் தத்துவார்த்தம் கூறி, என்றென் றும் மக்களின்' மதி அந்த காலத்திலேயே தவழந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/49&oldid=1033288" இலிருந்து மீள்விக்கப்பட்டது