பக்கம்:புராண மதங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



.49 அண்ணாதுரை கொண்டிருக்கச் செய்யும் சீரற்ற செயலை மேற்கொள்ள வில்லை. மூட மதியினரான முடிதாங்கிகள் தரும் தண் டனைக்கும், குருமார்களின் கோபத்திற்கும் ஆளாகி ஆவி பிரிய நேரிட்டாலும், உயிருடனே கொடுமைக்குள் ளானாலும், மக்களுக்கு மதியூட்டும் மார்க்கத்தைக் காணப் பின்னடையவில்லை. மக்களின் அறிவியல் வளர்ச்சிக்கு ஆக்கந் தேடினர். தேவாலயத்தி லிருந்த தேவர்களையும், அவர்களைக் குறித்துக் கூறப்படும் கற் பனைகளையும், அறிவைக் கெடுக்கும் அபத்தக் களஞ்சி யங்களெனத், தயவு தாட்சண்யம் பார்க்காமல் அம்பலப் படுத்தினர், சிந்தனை வளர்ந்தது. புது யுகமும் பிறந் தது. மக்களும் புது வாழ்வும் வளமும் பெற்றனர்.) வேறு துறையிலே வேல பார்க்கும் படித்த மேதா விகள் இருக்கட்டும், படித்து பட்டம் பெற்று, பல நாடு சுற்றித் திரிந்து அனுபவம் பெற்று, மக்கள் அறிவை, ஆட்டிப் படைக்கும் நிலையிலுள்ள, பத்திரிகை ஆசிரியர்கள் தான் எத்தகைய பணியை மேற்கொண் டுள்ளார்கள்? கோகிலாட்டமி, மகாத்மியம் - சிவராத்திரி மகாத் மியம் - இது போன்றவற்றுக்குத் தானே பத்தி பத்தி யாக, பெர்லின் பிரச்னை - அமெரிக்காவின் ஆதிக்கம் - சோவியத்தின் தொழில்வளம் - முதலியவற்றிற்கு ஒதுக் கும் இடத்தைக் காட்டிலும் மிகுதியாக ஒதுக்குகிறார் கள். இவ்வாறு செய்வதில்லை என்று இவர்கள் மறுத் துக் கூற இவர்களுக்கு நாக்குண்டா? 8 வயதுக் கிராமப் பெண் சுரஜ் கடவுள்களுடன் சேர்ந்து இருந்ததாகக் கூறுகிறாள். கடந்த 10 நாட்க ளாக இது நகரில் பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக் கிறது. யாவரும் அப்பெண்ணை வந்து பார்க்கின் றனர். சபர்மதி கரையிலுள்ள கிராமத்தில் தான் இச் சிறுமி வசித்து வருகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/50&oldid=1033289" இலிருந்து மீள்விக்கப்பட்டது