பக்கம்:புராண மதங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை 53 மான்ய மளித்தனர். ஆயிரமாயிரம் வேலிகளும் அதைச் சூழ்ந்த அழகிய கிராமங்களும் இன்றும் பல பெரிய மடங்களுக்குச் சொத்தாக உள்ளன. மடத்தில் மடாதி பதி இருக்கிறார். நாட்டுக்கொரு அரசன் இருத்தல் போன்று. ஆனால் மடாதிபதிகளின் மாண்பு கவி கூறிய படி இருந்தால் தான் மடாதிபதிகளைக் குறித்து கதை களில் கண்டித்து எழுதப்பட்டு நாடகங்களின் மூலம் காட்டப்பட்டு, படக் காட்சிகள் மூலமும் பரப்பப் பட்டது. மடாதிபதிகளைப் பற்றி மக்கள் கருத்து தென்னாட்டி லுள்ளோரும், கடல் கடந்து வாழும் தமிழரும், சுவாமிகால், யே காப்பியாசத்திற்கு எழுந்தருள் லாமே!! என்று ஒரு மடாதிபதி மற்றொரு மடாதிபதிக் குக் கூறியதாகச் சந்திரகாந்தா எனும் படக் காட்சியில் காட்டப்படும் காட்சியை மறந்திருக்க முடியாது. அப் படம் காட்டப்பட்ட காலையில் ஊரெங்கும், தெருவெங் கும், வீடெங்கும் இதே பேசசுத்தான்! சுவாமிகாள்!! என்ற சத்தம், சிரிப்பு, கேலி, கண்டனம் இவ்வளவும் நடந்தது. சைவம் தழைக்க, தமிழ் வளர தமிழ் வாழ, வழி கோலவும், வகை தேடவும், பணியாற்றவும் நிறுவப் பட்ட மடங்களின் அதிபர்களைப் பற்றி, மக்கள் எவ் வளவு - எங்கனம் காத்துக் கொண்டுள்ளார்கள் என் பது அந்தப் படத்துக்குக் கிடைத்த அமோகமான வரவேற்பிலிருந்தே நன்கு விளங்கிற்று. மக்கள் எங்ஙனம் மடாதிபதிகளைக் கண்டு வருகின் றனர் இன்றைய தினம். அரண்மனை போன்ற மடம், அதைச் சுற்றிலும் பூந்தோட்டம், சிற்றாறு போன்ற கால்வாய், அங்கு செவ்விளநீர் மரமும், செவ்வாழைக் கன்றும், அலரியும் ரோஜாவும் அலங்கரிக்கும் தோட்டம், அங்கு ஆயாச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/54&oldid=1033293" இலிருந்து மீள்விக்கப்பட்டது