அண்ணாதுரை
55
கால நிலைமை எங்ஙனமுள்ளது?
நடக்கும் காலம் என்ன? "எலும்பைப் பெண்ணுருவாக்கும்" காலமா, ஏடு எதிர்நோக்கிச் செல்லும் காலமா, நரி பரியாகும் நேரமா? இல்லை! ஆராய்ச்சிக் காலம், அறிவே வழிகாட்டியாக அமைந்துள்ள காலம், கோலாட்சியை மாற்றி குடியாட்சி அமைக்கும் காலம், முதலாளித்வத்தை நீக்கி சமதர்மத்தை அமைக்கும் காலம், புத்தம்புது கருத்துக்கள் பூத்திடும் நேரம், புரட்சிக்காலம்!!
இந்தக் காலத்தில் மடாதிபதிகள், இந்நிலையில் இருப்பதெனில், மக்கள் மனதில் அவர்பால் மதிப்பும் அன்பும் ஒழுகுமென்றா கூறமுடியும். அங்ஙனங் கூறல் உண்மையை மறைப்பதாகும். பட்டணப் பிரவேசத்திற்காகப் பல்லக்கில் பரிமளகந்தமணிந்து, இரவைப் பகலாக்கும் விதத்தில் எண்ணற்ற விளக்குகள் புடை சூழ மக்கள் முன்பு பவனி வரும் "தம்பிரான்கள்" எங்ஙனம் மக்களால் போற்றப்பட முடியும்.
தம்பிரானின் தங்க மேனியைக் கண்டு தமது உடலில் உள்ள ஓடிசலையும் மக்கள் காண்பரேல் சைவத்தின் மாண்பு தம்பிரானுக்குச் சென்றதே யன்றி நமக்குக் காணோமே என்று ஏங்காமலிரார். சைவத்தைப் பரப்ப வந்தவர் தங்கப் பல்லக்கில் முத்து வடமும், பவள மோதிரமும், தங்கத் தோடுகளும், வெண்பட்டாடையும் உடுத்திப் பவனிவர, உழைத்த உழுத, அறுத்த, பிளந்த கைளும், அறுத்த கால்களும், ஒட்டிய வயிரும் படைத்த மக்கள் கண்டு உளத்தில் என்ன எண்ணுவர். சைவத்தின் சிறப்பே சிறப்பு என்று களிப்பரா!
"தோடுடைய செவியின்—விடை ஏறி" தம்பிரான்களை இங்ஙனம் நடக்கும்படி "அருள் பலிக்க" நமக்குக் காடுபோல் வீடும், எலும்புக் கூடுபோல் குடும்பத்தினரும் இருக்கத்தான் அருளினார் போலும்! என்னே இவ-