பக்கம்:புராண மதங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புராண - மதங்கள் ரின் நீதி! என்று ஏன் எண்ணமாட்டார்கள். ஆயிரம் தொழிலாளரைப் பஞ்சாலையில் வேலைக்கு அமர்த்தி முதலாளி, ஆறு நாளைக்கொரு முறை வேலை நிறுத்தப் புயலில் சிக்கும் இந்தக்காலத்தில் மடாதிபதிகள் வாழ்க் கையை ஒரு, உல்லாச ஊஞ்சலாக்கிக்கொண்டு சைவத் தைச் சாய்வதற்கு சோபாவாகக் கொண்டு "மந்திரமா வது நீறு - வானவர் மேலது நீறு என்ற பாடலுக்கு மக் கள் செவி சாய்க்க வேண்டுமென விரும்பினால் அது நடக்கிற காரியமா? மடங்களைப் பற்றி நமது கருத்து மடங்கள் சன்மார்க்க சாலைகளாக, தமிழன் மன்ற மாக, தமிழர் நல் வாழ்க்கைக்குப் பயிற்சிக்கூடமாக இருத்தல் வேண்டும் என்பதும், மடத்துச் சொத்துப் பூராவும் இத்தகைய பணிக்கே பயன்பட வேண்டுமே யன்றி, கையில் அணிந்துள்ள வைர மோதிரத்தின் வெளிச்சம் பச்சை மோதிரத்தின் ஒளியை அடக்க முயன்று தோற்க, அதுகண்டு காதுகளிலே தொங்கும் தங்கக் குண்டலம் தக தகவெனச் சிரிக்க, தம்பிரான் கள் காட்சியளிப்பதற்குப் பயன்படக்கூடாது என்ற கருத்துடையோம் நாம். நமது கருத்து காலத்தின் கண் ணாடி என்பதை யாரும் மறுக்கார்.) தமிழ் மன்னர்கள் அன்று மடாதிபதிகள் மூலம் மக்களின் அறிவும் தன்மையும் வளர வேண்டும் என்றெண்ணியே பெரும் பெரும் சொத்தை ஒப்படைத் தனர். இதனைக் கொண்டு மடாதிபதிகள் மக்களிடை உலவித் தொண்டாற்றி வந்திருப்பின் தமிழ்நாடு எத்த னையோ விதத்தில் முன்னேறியிருந்திருக்கும். சில மடங்களில் வித்வான்கள் பாடங் கற்பதும், தத்துவார்த்தம் பயில்வதும், கவி கற்பதும் நாம் அறி வோம். பண்பாடியும் பதிகம் கோர்த்தும் தேவார திரு வாசகம் ஓதியும் திருவிளையாடற் புராணத்தின் உட் கருத்துக்களை உணர்த்தும் தீவண்ணனாம் எமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/57&oldid=1033296" இலிருந்து மீள்விக்கப்பட்டது