பக்கம்:புராண மதங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை சிவனார்" என்று திருத்தாண்டகம் பாடியும் பிரணவத் தின் கருத்து கற்றும் வரும் பண்டிதர்களுக்கு மடங்கள் இடம் அளித்தன என்பதையும் நாம் அறிவோம். பரிசு கள் வழங்கும் மடங்களையும் நாம் அறிவோம். ஆனால், இவைகள் போதா; இவைகள் தான் முறை என்றும் நாம் எண்ணோம். மடங்களில் பயின்றோர், மாசற்ற தமிழ் கற்றிருப் பர். ஆனால் அவர்களின் புலமை பழைமையை மீண்டும் மக்களிடையே பரப்பப் பயன்பட்டதே யன்றி காலத் துக்கேற்ற பணியாற்றத் தூண்டவில்லை. "தில்லை நட ராஜனின் திருத்தாண்டவத்துக்கு மற்றொரு தத்து வார்த்தம் கூறவும், உமையொரு பாகனின் உருவ அமைப்புக்கு உவமை கூறவும் உதவிற்றே யன்றி, உலகுக்கும் நம் நாட்டுக்கும் உள்ள உருமாற்றம், உளமாற்றம், ஆகியவற்றை விளக்க உதவவில்லை. "முன்னிருந்தோர் மதங்களைப் பற்றியே பாடிப் பாடி உயர்ந்த பக்தி நிலைக்கு வந்து விட்டார்கள். மற்ற வைகளைப்பற்றி அவர்கள் பாடக்கூட நினைத்ததில்லை. முதல் நூல், வழி நூல், சார்பு நூல் இந்த மூன்றையுந் தவிர வேறு வகையில் ஏதாவது செய்தால் அந்தக் காலத்தில் ராஜாக்களிடமிருந்த கவிப்பெரு மக்கள் காதையோ, மூக்கையோ, அறுத்துவிட உத்தரவிட்டு விடுவார்கள். 50 வருடங்களுக்கு முன்னால் கடவுளுக்கும் மனிதனுக்கு மிடையே யுள்ள சம்பந்தத்தைப் பற் றிப் பாடாத வேறு நூல்களை நீங்கள் பார்த்திருக்கிறீர் களா? கடவுளையே பாடவேண்டிய கஷ்டத்திலிருந்து விடுபட விரும்பிய சிலர் கடவுளை நாயகனாக வைத்துக் கவி யியற்ற ஆரம்பித்தார்கள். கடவுளைப் பற்றிப் பாடி னால் தான் நல்லவன் ! இல்லாவிட்டால் கவிஞன் அல்ல."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/58&oldid=1033297" இலிருந்து மீள்விக்கப்பட்டது