உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராண மதங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாதுரை

63

"இப்பொழுதிருக்கும் மடாதிபதிகள், பண்டாரச் சந்நிதிகளின் நிர்வாகத்தில் ஊழல்களும் ஊதாரித்தனங்களும்தான் இருக்கின்றனவே ஒழிய மகத்துவம் இருப்பதாக எந்த யோக்கியரும் கூற முடியாது"

என்று எழுதியிருக்கிறது. நாம் இக்கட்டுரையில் மடாதிபதிகளின் கோலாகல வாழ்க்கையைப் பற்றி ஆங்காங்கு விசாரித்துக் கூறிய கருத்துக்களை எல்லாம் திரட்டிக் கூறுவதுபோல, இரண்டே சொற்களில் அடக்கிவிட்டது. ஊழல், ஊதாரித்தனம் என்ற இரு சொற்களும் மடாதிபதிகளின் மகத்துவங்களை அரண் செய்யும் நற்சாட்சிப் பத்திரங்கள்தானா என்பதனை அன்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம். மடாதிபதிகள் என்றாலே மனங்குழைந்து மண்டியிட்டு வணங்க வேண்டிய 'மகத்துவமான' நிலை மாறி, அவர்களிடம் ஊழல்கள் நிறைந்துவிட்டன என்றும், ஊதாரித்தனங்கள் மிகுந்து மலிந்துவிட்டன என்றும் வெளிப்படையாகவே கூறுமளவுக்கு அவர்களின் அந்தரங்க அலங்கார வாழ்வுகள் அம்பலமாகிவிட்டன என்பதையும் இனியும் மறைத்து வைக்கவோ மறுத்துக் கூறவோ முடியுமா என்று கேட்கிறோம்.

இந்த நிலையில் சில தோழர்கள் மடாதிபதிகள் பக்கம் நின்று அவர்களுக்காக வாதாடும் நிலைமை விசித்திரமாகவே இருக்கிறது, இப்போது மடாதிபதிகளின் நிர்வாகத்தில் உள்ள சொத்துக்களைச் சர்க்கார் நிர்வாகத்தில் கொண்டுவந்துவிடுவது என்ற மசோதாவை எதிர்ப்பவர்கள், சர்க்கார், அத்திப் பூப்பதுபோல் ஏதாவது ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முற்பட்டால், அதை எதிர்த்து நாட்டின் முற்போக்குக்கு முட்டுக்கட்டையாக நிற்பவர்களே என்பதை யார்தான் மறுக்க முடியும்? இவர்கள்ளுடைய எதிர்ப்பில் ஏதாவது உண்மையும் நியாயமும் இருக்குமானால், ஒரு பொது மன்றங் கூட்டித் தங்களுடைய எதிர்ப்புக்கு உள்ள காரணத்தைக் கூறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/64&oldid=1700653" இலிருந்து மீள்விக்கப்பட்டது