உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராண மதங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

புராண-மதங்கள்

பக்த கோடிகள் பரவசத்துடனும், பொருளாதார நிபுணர்கள் பரிதாபங் கலந்த ஆச்சரியத்துடனும் பேசுவர். இவ்விதம், நமது நாட்டுக் கோயில்களிலே உள்ள நகைகளின் பெரு மதிப்பைப் பற்றி.

வெள்ளைக்காரக் கவர்னர்களின் முன்பு பட்டு அங்கியை விரித்து அதன்மீது, இந்த ஆபரணங்களைப் பரப்பி வைத்துக் காட்டுவர், கோயில் நிர்வாகிகள்—பூரிப்புடன்—பெருமையுடன்.

இந்தக் "குபேர சம்பத்தை"க் கண்டான பிறகு, கவர்னர்கள், 'கோவணாண்டிகளாக' உள்ள குப்பனும் சுப்பனும் அரைப் பட்னியாக இருப்பதைக் கூறி, அதற்குக் காரணம், கிராமத்துக்கு ஆறு கிடையாது, ஏரி உண்டு, அதற்குச் சரியான கரைகிடையாது, என்பன போன்ற தகவல்களைத் தந்து, "தர்மப்பிரபு" ஏழைகள் மீது கிருபை வைத்து, 'காருண்ய மிகுந்த சர்க்கார்' இந்த ஏழைகளின் கஷ்டத்தைப் போக்குவதற்கான, "திரவிய சகாயம்" செய்யவேண்டு மென்று 'பிரார்த்தித்து' மனு சமர்ப்பிக்கும், ஊர்பிரமுகர்களைக் கண்டுவிட்டு, மோட்டார் ஏறுவார்கள்.

நவரத்னங்களையும் கண்டார்கள் நடைப் பிணமாகும் ஏழைகளையும் கண்டார்கள்!! இது, நெடுநாளையநிலை.

பல தலைமுறைகளா, பலப்பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள, விலையுயர்ந்த நவரத்னங்கள்—கல்லிழைத்த நகைகள் — தங்க ஆபரணங்கள் — தங்கம் வெள்ளி ஆகியவைகளாலான சாமான்கள்— தங்கத்தில் சிங்கம், வெள்ளியில் ரிஷபம்—பச்சைக்கல் பதித்த மயில்—கோமேதகக் கண்களுடன் கருடன்—குங்குமக் கெம்பு புதைத்த அன்னம்—வெள்ளித் தேர் அதற்குத் தங்கக் குடை—இப்படிப் பட்டவைகள். கோயில்களிலே தூங்சிக் கொண்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/67&oldid=1700681" இலிருந்து மீள்விக்கப்பட்டது