பக்கம்:புராண மதங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

புராண-மதங்கள்

கரையைவிடச் சற்று அதிகமாகவே சீர்திருத்தத் துறையிலே அக்கரை செலுத்தவேண்டு மென்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அறிவாளிகள் என்ற பட்டிக்குத் தம் பெயர் பொறிக்கப்பட வேண்டுமானால் தமக்கும் சீர்திருத்தத்திலே ஆர்வம் இருப்பதாகவும், அதற்கான பணியிலே தாம் ஈடுபட்டிருப்பதாகவும், மற்றவர்கள் சீர்திருத்தத்துக்காக எங்கெங்கோ தேடி அலகிறார்களே, பாவம், இதோ நாம் கண்டு பிடித்திருக்கிறோமே, இதனைக் கூறவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பதாகவும், காட்டித் தீரவேண்டிய அளவுக்கு நாட்டு மக்களின் நினைப்பின் நிலைமை இன்று இருப்பதும், தெளிவாகத் தெரிகிறது. இனாகுலேஷன் சரியான முறை என்று சிலரும், அது தேவையில்லை என்று சிலரும் பேசிக்கொள்கிறார்கள் என்றால், இரு கருத்துகளிலே, எது தக்கது என்று ஆராய்வதற்கு முன்பே, ஊரிலே, பிளேக்—காலரா போன்ற கொடிய வியாதி பரவி இருக்கிறது என்பது ஏற்பட்டு விடுகிறது கருத்து வேற்றுமைக்கு இடமின்றி. அது போலத்தான் இன்று, புராணங்களிலே சீர்திருத்தக் கருத்துக்கள் உண்டா இல்லையா, என்பதிலே உள்ள கருத்து வேற்றுமை கருத்து வேற்றுமைக்கே இடமில்லாத ஒரு கருத்து நாட்டிலே இருப்பதைக் காட்டுகிறது; அதாவது சீர்திருத்தம் தேவை என்பது. இது வரவேற்கப்பட வேண்டிய நிலைமை.

***

சீர்திருத்தம் தேவை என்பதை அனைவரும், ‘செக்கு மாட்டுச் சுபாவக்காரர்’ நீங்கலாக மற்றவரனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்; ஒப்புக்கொள்பவர்களில் சிலர், என்ன செய்வதென்று சிந்திக்காமல் இருக்கிறார்கள். சிலர் சிந்திக்கிறார்கள், தெளிவு பிறக்காமல் குழம்புகிறார்கள். சிலர் சிந்தித்து வழி தெரிந்து, வழி, படுகுழிகளும், பாறை கோரைகளும் நிரம்பிக் கிடப்பது கண்டு பயந்துவிடுகின்றனர். சிலர் பாதிப்பாதை போகின்ற-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/7&oldid=1354203" இலிருந்து மீள்விக்கப்பட்டது