பக்கம்:புராண மதங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



70) புராண - மதங்கள் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்பவனுக்குத் தரப்பட்ட மதிப்பு மங்கி, பள்ளிக்கூடம் அமைத்துக் கல்வித் தொண்டு செய்பவனுக்கு மதிப்பு உயரத் தொடங்கிற்று. பஜனைக் கூடங்கள் கட்டும் பயனற்ற காரியத் தைப் பழமையை விடவே முடியாத சிலர் கட்டி அழு தனர் - புதிய பண்பினர், பல்கலைக் கழகங்கள் அமைக் கலாயினர். . உலகிலே இவ்வளவு மாறுதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலும் கூட, நமது நாட்டிலே மட்டும், தங்க ரிஷபத்தின் மீது சிவனார் , உலாவ வந்துகொண்டு தான் இருந்தார் - இருந்தாரா? - இருக்கிறார்!! கண்டனத்துக்கும் ஏளனத்துக்கும் ஆளான சுய மரியாதைக்காரன் மட்டும் மனதிலே கற்பனை கண்ட வண்ணம் இருந்தான் - இந்தப் பெரும் பொருள், விடு தலை பெற்று நாட்டிலே ஆலைகளாகவும் கல்வி நிலையங் களாகவும், வைத்திய விடுதிகளாகவும். வகையற்றோ ரின் பராமரிப்புச் சாலைகளாகவும், மாறும் ஒரு காட்சி யைக் கண்டு வந்தான். இன்றும், இவை, கற்பனைக் காட்சிகள் தான்! இன்னும் சில காலத்துக்கு, கற்பனைக் காட்சிகளாகவே இருக்கும் - ஆனால் நீண்ட காலத்துக்கு அல்ல - விழிப்பு நாள் விரைந்து வருகிறது - அறிகுறி கள் ஆயிரம் தெரிகின்றன. சின்னாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையிலே ஏதோ ஓர் அலுவலின்போது பேசிய அரசாங்க அதி காரி ஒருவர், கோயிலுக்குச் செலவிடும் பணத்திலே ஒரு பகுதியையாவது கல்விக்காக என்று தரலா காதா? - என்று கேட்டார். அவ்வளவுதான் அவர் கேட்க முடியும் - அதற்கே . அவர் மீது சிலருக்கு ஐயம் பிறந்து விட்டிருக்கும். ஆசாமிக்கு ஈரோட்டு ஜூரமோ? என்று கேட்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/71&oldid=1033310" இலிருந்து மீள்விக்கப்பட்டது