76
புராண-மதங்கள்
அதன் பயனாக அவர்களால், நேற்று இல்லாததை இன்று உண்டாக்கிக்காட்ட முடிகிறது—நாளையவாழ்வு நேற்றைய வாழ்வைவிட வசதிகள் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறுகிறது.
நாமோ, "இன்றைக்கு இருப்பாரை நாளைக்கு இருப்பரென்று எண்ணவே திடமில்லை" என்று சோகக் கீதம் பாடி சோம்பிக் கிடக்கிறோம்.
கோளங்கள் முதற்கொண்டு கொசு வரையிலே, அவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள் என்று கூறினது சொல்லடக்கு அல்ல, உண்மை.
சென்ற கிழமை ஒரு ஆஸ்திரேலிய விஞ்ஞானி, ஏற்கெனவே ஆராய்ச்சிக்கு அகப்பட்ட நட்சத்திரங்கள் தவிர, வேறோர் புதுநட்சத்திரம் இருப்பதாகவும், அந்த நட்சத்திரத்திலிருந்து ஒலிசக்தி கிளம்பிய வண்ணம் இருப்பதாகவும் ஆராய்ச்சியால் கண்டறிந்து கூறினார்.
எங்கே இருக்கிறது அந்த நட்சத்திரம், எவ்வண்ணம் இருக்கிறது என்பன போன்றவைகள் இன்னுங் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால், ஒரு குறிப்பிட்ட பகுதியிலே அந்த நட்சத்திரம் இருந்தாக வேண்டும் என்று நிர்ணயித்துவிட்டனர்; மேற்கொண்டு ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் இருக்கிறது-சில காலத்தில், புது உண்மைகள் பல வெளிவரக்கூடும் - புது நலன்களும் கிடைக்கக்கூடும்.
சென்ற கிழமை, மற்றோர் பிரபல விஞ்ஞானி பிக்கார்டு என்பவர், கடலுக்கு அடியிலே உள்ள நிலைமைகளைக் காணும் கருத்துடன், அதற்கான கருவியை அமைத்துக்கொண்டு கடலுக்குள்ளே சென்றார். அவ-