பக்கம்:புராண மதங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புராண - மதங்கள் இவைகளின் தொல்லையை நீக்க முடியாது , தத் தளித்தே, அந்த நிலப் பகுதிகளை, விட்டு விட நேரிட்டது. அமெரிக்க கண்டத்திலே கியூபா எனும் பிரதேசத் திலே, இப்படிப்பட்ட சதுப்பு நிலம் இருக்கிறது - கொசுத் தொல்லை சகிக்க முடியாததாகிவிட்டது, நோய் பரவலாயிற்று ! கொசுக்களை அழித்தாலன்றி, வாழ்வு சுகப்படாது என்று தெரிந்தது, அதற்கு என்ன வழி என்றும் ஆராயத் தொடங்கினர். மார்டின்-சி - கான் என்ற ஆராய்ச்சியாளர், இந் தத் துரையிலே வேலை செய்து, வெற்றியும் பெற்று விட்டார். கொசுக்களைப் பிடித்து அழிக்கும், ஒரு அற்புதமான வலை' யை அவர் கண்டுபிடித்து, அமெ ரிக்க சர்க்காருக்குத் தந்திருக்கிறார். எவ்வளவு நுண் ணறிவு இந்த வலை' அமைக்க, உபயோகப்பட்டிருக் கிறது, என்பதைக் கவனியுங்கள். ஆறடி உயரம் - மூன்றடி அகலம் உள்ள, ஒரு பெட்டி; அதனுள் மின்சாரத்தால் இயங்கும் திரைகள், இந்தப் பெட்டி, பாடுகிறது - கொசுப் பாட்டு - அதி லும் காதல் பாட்டு!! | பெண் கொசுவின் சத்தத்தை மின்சாரத் துணை யால் பதிவு செய்து கிராமபோன் பிளேட்டுகளைத் தயா ரித்திருக்கிறார். இந்தப் பிளேட்டுகளினால், பெட்டிக் குள்ளே பெண் கொசுவின் பாட்டுக் கேட்கிறது. இந்த 'இசை' கிளம்பியதும், காதற் பாட்டல்லவா , கொசுக் கள், இலயித்து விடுகின்றனவாம் - கீதம் கேட்கும் இடத்திற்கு வருகின்றன, கும்பல் கும்பலாக - பெட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/79&oldid=1033318" இலிருந்து மீள்விக்கப்பட்டது