பக்கம்:புராண மதங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



80 புராண - மதங்கள் என்று பாடியிருப்பார். ஆனால் இந்த நிலை யில்லாத, ஆபாசமிகுந்த தேகத்தைப் பற்றி, அதிலும் தைய லாரின் தேகத்தைப் பற்றிப் பாடத் தொடங்கிறாலோ, பக்திப் பாசுரக்காரரும், பாராயண நூல் கோர்த்தவரும், பரமன் அருள் பெற்றவரும், அங்கம் ஒவ்வொன்றும் அழகுற அகக்கண் முன் நிறுத்தி, அளவும் தன்மையும் கண்டு, கனி மொழியினால் கூறுவதிலே, நிகர் இல்லா திருப்பதைக் காணலாம். மும்மலக் கேணியை வேறோர் பக்தர் வர்ணித்திடும் வகையைக் காண வேண்டுகிறோம். மலரணி கொண்டைச் சொருக்கிலே! கொலுமொழி யின்பச் செருக்கிலே நிலவொளி அங்கக் குலுக்கிலே நிறை பரிமள கொங்கைக் குடத்திலே' என்று 'குளோசப்" காட்சிகளை முதல் தரமான சினிமா டைரக்டரும் பொறாமைப் படும் அளவுக்குக் காட்டி விட்டு, "நிமிஷம் இணங்கிய செய்தியைக் கூறி, அதன் பலனாக அந் நங்கை , "சொப்பனத்திலே" வருவதையும் கூறிக் கடைசியில், முருகோனே! மால் மருகோனே! இதனின்றும் என்னைக் காப்பாற்று என்று முடிப்பர். வெல்லும் சொல், கொல்லுங் கண் , வேட்கை நகை, குறுகிய நெற்றி, இருண்ட குழல் , திரண்ட தனம், மருட்டும் விழி, மதுர இதழ், இவைகளை அவர்கள் துதித்திருப்பதைவிட, அளவிலே ஆறுமுகனையோ அவரின் ஐயனையோ துதித்திருக்கும்! அளவு, குறை வாகத்தான் இருக்கும்! பாயாசமுடன் விருந்துண்டான பிறகு, தெருத் திண்ணையில் உட்கார்ந்து கோண்டு, "என்னமோ , பசி அடங்கக் கொஞ்சம் சாப்பாடு அவ் வளவு தானே வேண்டும். அந்தச் சாப்பாடு எதுவாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/81&oldid=1033320" இலிருந்து மீள்விக்கப்பட்டது