பக்கம்:புராண மதங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



82 புராண - மதங்கள் L பா } மிராண்டிகளாகி விட்டதைக் காணும் போது, நமது கடமையைச் செய்தாக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்ல, அதனைத் துரிதமாகச் செய்தாக வேண்டும், துளியும் தயக்கமின்றி செய்தாக வேண்டும் என்ற உறுதி பலப்படுகிறது. தொதவரின் நிலை என்ன ஆயிற்று? சிகப்பு இந்தியர் நிலை என்ன ஆயிற்று? ஏன் அவர்கள் அக்கதிக்கு ஆளாயினர்? என்பதன் "சூக்ஷ் மத்தை" ஆராய்ந்தால், மூடிவைத்து கேடு தானாகப் போய்விடும் என்று இருந்தது ஆகியவைகளே, அந்த இன்னல்களை அளித்துவிட்டன என்பதை உணரலாம். டராணத்திலே உள்ள கருத்துக்களிலே பல நாளா வட்டத்திலே மறைந்து விடுகின்றன என்பதும், பொது அறிவு பரவப் பரவ, பல கருத்துக்கள் என்று நகையாடப் பட்டுத் தள்ளப்பட்டு விடுகின்றன என் பதும் உண்மை . ஆனால் சில கருத்துக்கள் உரம் குறை யாமல் உள்ளன. சிலவற்றுக்கு உரம் தருகிறார்கள். ஏன்? எத்தகைய கருத்துக்களுக்கு? எந்தெந்த கருத்துக் கள், ஒரு சிறு கூட்டத்தின் சுகபோக வாழ்வுக்கு வழி செய்கின்றனவோ, ஒரு கும்பல் பாடுபடாது வாழ மார்க்க மாகிறதோ, அந்தக் கருத்துக்கள் காலவேகம், பொது அறிவு பரவுதல் என்பவைகளில் தாக்கப்பட் டாலும், எந்தச் சிறுகூட்டம், அத்தகைய கருத்துக்கள் நிலவி இருப்பதால் தங்களுக்கு இலாபம் இருக்கிறதோ அவைகளை கெடவிடாதபடி பார்த்துக் கொள்வதிலும், உரம் போடுவதிலும் கண்ணும் கருத்துமாக இருக் கிறது இங்கு அந்தச் சிறு கூட்டமே, "பிரச்சார யந் திரம்" சிக்கிக்கொண் டிருப்பதால். தங்கள் சுக வாழ் வுக்கு உகந்த கருத்துக்கள் அழிந்துப்படாமல் பார்த்துக் கொள்ள அவர்கள் யந்திரத்தைப் பயன் படுத்து கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/83&oldid=1033322" இலிருந்து மீள்விக்கப்பட்டது