பக்கம்:புராண மதங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை 83 கம்பவுண்டர் கேசவன், டாக்டர் தாமோதரத் துக்குத் தொல்லை தராமல் இதயமாகப் பேசி ஒழுங் காகவே நடந்து வந்தான். "கேசவா! கேசவா! என்று டாக்டர் ஒரு நாளைக்கு நூறு முறையாவது கூப்பிடுவார். அவனும் அன்பும் பணிவும் தோன்றவே நடப்பான். கேசவன் டாக்டர் தாமோதரனுக்குக் கம்பவுண்டர்தான். ஆனால் தந்தைக்கு மகனாயிற்றே! அவன் தந்தையோ மணிமந்திர வைத்தியர் ! அதாவது நோய் தீர மருந்தும் தருவார். மந்திரமும் செய்வார். டாக்டர் நாடி பார்த்து, நாக்கை நீட்டச் செய்து பரி சோதித்து மருந்து எழுதிக் கொடுத்தான். பிறகு நோயாளி உள் அறைக்கு வந்து சீட்டைக் காட்டியதும் கம்பவுண்டர் கேசவன் அவனைப் புன்னகையுடன் வர வேற்று உட்காரச் சொல்லிவிட்டு, மருந்து கலக்கிக் கொண்டே பேசுவான். "இந்த வயித்துவலி எவ்வளவு காலமாக இருக் குது சார். அதை ஏன் கேக்கிறிங்க. என்னமோ என் போறாத வேளை, போன கார்த்திகையிலிருந்து இந்தக் கர்மம் என் உயிரை வாட்டுது." ஐயோ! பாவம்! ஆமாம், ஏன் இவ்வளவு நாளாய் மருந்து சாப்பிடவில்லை?" "சாப்பிடவில்லையா? இதுவரையிலே என் வயித் துக்குள்ளே ஒரு கிணறு மருந்து போயிருக்கும். டாக் டர் சேகர், டாக்டர் லோகநாதன், கெவர்மெண்டு ஆஸ்பத்திரி எல்லாம் முடிஞ்சி, இப்போ இங்கே வந்தேன். "ஓஹோ! பல இடத்திலே மருந்து சாப்பிட் டாச்சா. ஒரு வினாடி மௌனம்) டாக்டர் என்ன செய் கிறார் என்று கொஞ்சம் எட்டிப் பாருங்கோ . (பார்த்துவிட்டு வந்து)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/84&oldid=1033323" இலிருந்து மீள்விக்கப்பட்டது