பக்கம்:புராண மதங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புராண - மதங்கள் பேப்பர் படிக்கிறார்" "சார் ஒரு விஷயம் உங்க மனசோடு போட்டு வையுங்கோ. இப்படிப்பட்ட வயித்து வலிக்கு மருந்து சாப்பிட்டா மட்டும் போதாது; உடம்பர் லொத்தது மருந்தாலே போகும். சிலது மந்திரிச்சாதாம் போகும். மகாதேவ முதலியாருக்கு இரட்டை கட்டின பிறகுதான் வலி நின்றது. "அப்படியா! எங்கே மந்திரிக்கிறார்கள். நீங்க தப்பாக நினைக்கக்கூடாது. என் தகப்பனார் கூட மந்திரிப்பார்" பெயர்! "மணிமந்திர ஒளஷதாலயம் மன்னர் செட்டியார்" இந்தப் பேச்சுக்குப் பிறகு நோயாளி மணி மந்திர அவுஷதாலயம் போகிறான் ! கேசவன் கம்பவுண்டராக இருந்து டாக்டருக்கு என்ன பயன்? இங்கு இத்தகைய கேசவன்மார் கூட்டம் இருக் கிறது. அவர்கள் புத்துலகச்சாமி யாலயத்திலே கூடப் பணி புரிவர், ஆனால் பழைமையின் ஏஜெண்டாகவே மறை முகத்தில் வேலை செய்வார். இந்தக் கூட்டமே புராணக் கருத்துக்களிலே தமது சுயநலக் காரியத்துக்கு ஏற்றவைகள் பழுதுபடாதபடி பார்த்துக் கொள்வது. அதன் பயனாகவே அந்தக் கருத்துக்கள் நாட்டு மக்க ளிடை இன்னும் நடமாட முடிகின்றன. இல்லையானால், புராணகால எண்ணங்களிலே எவ்வளவோ மாறி யிருக்க, எத்தனையையோ விட்டுக்கொடுக்க இதோ கூட் டம் தயாராக இருக்க, ஒரு சில கருத்துக்களை மட்டும் விடாப் பிடியாகப் பற்றிக்கொண் டிருப்பானேன்? விட்டுவிட மறுப்பானேன? உலகம் தட்டையாக இருந் தது என்ற எண்ணத்தைக் கொண்டுதான் இரணியாட் சதன் பூலோகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளித்துவைத்தான் என்று புராணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/85&oldid=1033324" இலிருந்து மீள்விக்கப்பட்டது