86
புராண-மதங்கள்
ரம், என்ற புதிய கருத்தை ஏற்றுக் கொண்டால் பழைய கருத்தை நம்பி மக்கள் தரும் பணம் கிடைப்பது நின்றுவிடும் ஆகவே நஷ்டம். எனவே, தமக்கு நஷ்டம் தரக்கூடிய புதுக் கருத்துக்களை அப்பூசுரக் கூட்டம், எங்ஙனம் வரவேற்கும்? எதிர்க்கத்தானே செய்யும். ஆயிரம் தத்துவத்தை விட அரை ரூபாய் தட்சணைமேல் என்று எண்ணும் கூட்டமல்லவா அது. எங்ஙனம் அந்தக் கூட்டம் சுயநலத்தை இழக்கத் துணியும்? அதற்குப் பிரத்தியேகமான நற்குணம் வேண்டுமே, எங்ஙனம் அதனைச் சுயநலத்தையும் சுகபோகத்தையும் பாரம்பரியமாக ஆண்டு அனுபவித்துக் கொண்டு வரும் கூட்டம் பெறமுடியும்? இதனை உணராத சிலர், வேறு எத்தனையோ கருத்துக்கள், நாளா வட்டத்திலே நசித்துப் போனது போலவே, பொது அறிவு பரவினதால் அவை புதையுண்டது போல, மிச்சமிருக்கும் நச்சு நினைப்பும் பிச்சுப் பிள்ளை விளையாட்டும் தாமாகவே ஒழிந்து போகும் என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையிலே வடலூராரும், "கண்மூடி வழக்க மெல்லாம் மண்மூடி போக" என்று கூறினார். கூறினதைக் கீதமாக்கிக் கொண்டனரே ஒழியக் கண்மூடி வழக்கத்தை யார் வெட்டிப் புதைக்க முன் வந்தனர். அருட்பாவைப் பூசத்துக் கேற்ற பாசுரமாக்கினரேயொழிய பூசுரப் புரட்டு ஒழிப்புக்கான மார்க்கமாகக் கொண்டவர்கள் யார்? எனவே தான், ஒருகூட்டத்துக்கு அது பார்ப்பனக்கூட்டமாக இருப்பதால்என்று மட்டு மல்ல, எந்தக் கூட்டமாக இருப்பினும் சரியே, ஒரு கூட்டத்தின் சுய நலத்தை வளர்க்கும் எண்ணங்களைச் சுலபத்திலே மடிய விட மாட்டார்கள். இங்கு மட்டுமல்ல, எங்கும்! அந்த எண்ணங்களைத் துணிவுடன் தாக்கித் தகர்த்தாலொழிய அவை மாளா. அவை மாள ஒட்டாது தடுக்க, சகல சாதனங்களையும் உபயோகிக்க, சுயநலக் கூட்டம் ஒரு துளியும் தயங்காது. அந்தச் சாதனங்களிலே மிக முக்கியமானது, புராணப்,