பக்கம்:புராண மதங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை 87 பிரசாரம் ! இதனை, நமது நண்பர்கள், இலக்கியச் சுவைக் காக என்றோ, கல்வெட்டு வரலாறு என்றோ எண்ணிக் கொண்டு, செய்பவர்களாகக் கூட இருப்பர். கதை கிடக் கட்டும். இதிலே காணக் கிடைக்கும் வரலாற்றுத் துணுக்குகளின் மூலம் தமிழகத்தைக் காண்கிறோமே என்று பூரிக்கக் கூடும். பங்கப் பழனத்து உழும் உழவர் பலவின் கனியைப் பறித்ததென்று சங்கிட்டு எறிய" என்று செய்யுளைப் பாடி, "என்னே! இந்நாட்டு வளம்! உழவர் உழுகின்றனர்! உழவுதானே உயிர்கட்கு ஆதாரம்! ஆதலானன்றோ தெய்வப் புலமைத் திருவள் ளுவனரும் "உழுதுண்டு வாழவாரே வாழ்வார் என் றார். அத்தகைய உழவு! ஆங்கு மரங்களிலே மந்திக் கூட்டம். அவை பலாவினைப் பறித்தான். பார்த்த உழ வர், மந்தியை விரட்டுகின்றனர். யாங்ஙனம்? கல்கொண்டு இல?)! கல் ஏது? கட்டாந்தரையோ அது! அல்ல! வயல்! எனவே உழவர், அங்கு கிடந்தது கொண்டு, மந்தியினை விரட்டலாயினர். என்ன கிடைத் தது? அங்கேதான் மெய்யன்பர்கள், நம் தமிழ் நாட்டின், தவம் நிறைந்த தமிழகத்தில், செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்று இந்நாள் புலவர் இறும்பூ தெய்திப் பாடியபடி பண்பு நிறைந்த தமிழகத்திலே, எத்தகைய வளம் இருந்தது என்பதைக் கூர்ந்து நோக்குதல் வேண்டும். வயலிலே சங்குகள் கிடைத்தன ! வளமான நாடு இதற்கு உண்டோ ஈடு? சங்குகள் ! சங்குகள் ! உழவர் கண்டது சங்குகளை! வாரினார் ! வீகினார்!" என்று செய் யுளைப் பிழிந்து பிழிந்து செந்தமிழ்ச் சுவைைைய சொட் டச் செய்து, புராணமே யாயினும், புதுமைக்கு ஒவ் வாது எனினும், புதைந்துள்ள பொன்னைக் காணீர். கலக் கருவூலத்தைப் பாரீர், என்று கூறப் புராணங் களைப் பயன்படுத்திக் கொள்பவர்களாகச் சிலர் இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/88&oldid=1033327" இலிருந்து மீள்விக்கப்பட்டது