பக்கம்:புராண மதங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



- 88 - புராண - மதங்கள் கக் கூடும். எக்கருத்துக்காக, எம்முறையிலே இவர்கள் அந்தப் புராணத்தைப்பற்றிப் பேசினும் சரியே, பொது வாக அம் முறை, புராணப் பிரசாரம் நடைபெறுவ தாகவே முடியும், விளையும், இவர்கள் நெஞ்சை அள் ளும் கலை பரவுவதாகவோ, வரலாறு பரபுவதாகவோ இராது. விளைவு கற்பூரக் கடையின் கணக்கும், கன பாடியின் தொந்தியும் பெருத்து விடுவதாகத்தான் இருக்கும். புராணப் பிரசாரத்தின் பலனைப் பூசுரக் கூட் டம் இனிமையாக அனுபவிக்கும், இதனை, அக்கூட்டத் துக்குக் கூலியுமின்றி செய்த "குரலோர் " புலவர், படிப்பாளி. சூனாமானாவின் வைரி, அவர் நாவிலே சரஸ் வதியே தாண்டவமாடுகிறாள். சகலகலா வல்லவர் என்ற ஓசைப் பட்டங்களைப் பெற்றதன்றி வேறு உருவான பலனையும் பெறுவ தில்லை. இதனை அவர்கள் உணருவ தில்ல. உணர்ந்தோர் உரைத்தாலோ . சீறாமலும் இருப் பதில்லை.சிவநேயர்களின் சீற்றம் சிரிப்புக்கிடமானதே!! இங்கே சீறுகின்றனர் இச் செல்வர்கள். ஆனால் செல் புகுந்த ஏடுகளைச் செந்தமிழ் கலந்து நாட்டினருக்குத் தரும் இவர் தம் "சேவையால்" பட்டமரம் துளிர்த்த தைப் போல, பாழ்பட இருந்த தமது சுகபோக வாழ்வு மீண்டும் வளமாகிறது என்பதை உணர்ந்து, அந்தச் சிறு கூட்டம், சிரிக்கிறது!! பாவையர் படப்பிடிப்பும்' கலைச் சுவையும். வரலாற்றுத் துறையும், உள்ளன என்று புராணங்களைப் போற்றிப் புகழ்பவர்கள். ஆரி யத்தின் ஏஜண்டுகள் - கமிஷனும் கிடையாது!! காமக் கூத்து நடைபெறும் இடத்திலே கற்பூரக் கடை வைப் பது கடவுள் நெறியைக் கயவரும் உணரச் செய்யும் புண்ய காரியமாகும் என்று கருதிச்செய்பவர் உண்டோ ? செய்தால் பயன் என்ன காணமுடியும் ! அதுபோல, காமக்கிருமிகள் நெளியும் பல பாடல்களுக்கு இடை யிடையே கடவுள் சொரூபத்தைக் காட்டுகிறோம் பாரீர். என்று புராணம் படிப்பதும், பயனற்ற முறையாகும், புராணப் பிரச்சாரத்தின் விளைவாக. சன்மார்க்கம் பரவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/89&oldid=1033328" இலிருந்து மீள்விக்கப்பட்டது