பக்கம்:புராண மதங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



89 அண்ணாதுரை முடியாதபடி போகிறது என்பதுமட்டுமல்ல, கலைக்காக, வரலாற்றுக்காக . என்று எதைக்கூறி அந்தக் காரியத் தைச் செய்தாலும் சரியே, அச் செயல் பூசுர அரசு அமைக்க புலவர் முரசு கொட்டுகிறார் என்றே பொருள். இந்த காரியத்துக்கா தமிழ் அறிவு பயன்படுத்தப்பட வேண்டும்! பெற்ற மகனைப் பெருநிதி படைத்தோனாகக் காணமுடியாவிட்டாலும், பிறன் மனை நுழையாதபடி யாவது தடுக்கக்கூடாதா - தடுத்தல் வேண்டாமா? கற்ற தமிழின் துணை கொண்டு, சமுதாயத்திலே கப்பிக் கொண்டுள்ள காரிருளை நீக்கும் கடமையைச் செய் யத்தான் தவறிவிட்டார்களே, அத்தமிழை ஆரிய உமிழ் நீரிலே ஆழ்த்தும், அக்ரமத்தையாவது செய்யாதிருக்கக் கூடாதா? ஒரு முகம், எட்டுக் கரங்கள் ! பொன்னிறமான உடல் ! பொற் பட்டு அணிந்து, பொன்னாபரணம் பூண்டு, கரங்களில், தூபம், கமலம், கமண்டலம், மணி, ஜெபமாலை ஆகியவைகளை ஏந்திய வண்ணம், ஒற்றைச் சக்கரமுள்ள தேரில், வெண் தாமரையைப் பீடமாக அமைத்து அதன்மீது அமர்ந்து, மேருமலையின் இடப் புறமிருந்து கிளம்பி , அதனை வலம் செய்து, இந்திரப் பட்டினம், யமபட்டினம், வருணன், சோமன் ஆகியோ ரின் பட்டினங்களைத் தாண்டி, மீண்டும் இந்திரப் பட்டி னம் திரும்புவான் ! தேருக்கு சக்கரம் ஒன்று - குதிரை கள் ஏழு! தேரிலே எவ்விதமான கோலத்துடன், சூரிய தேவன், கிளம்பும்போது, புலத்தியன், புலகன் , வசிட் டன், அங்கிரா, கௌசிகன், பரத்துவாசன், பிருகு, கிருது, கௌதமன், காசிபன், சமதக்னி, அத்திரி, என் போர், மாதத்துக்கு ஒருவராக வந்திருந்து தோத்திரம் செய்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/90&oldid=1033329" இலிருந்து மீள்விக்கப்பட்டது