உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராண மதங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாதுரை

91

டார்! சூரியதேவன், அந்தச் சாயாதேவியுடன் சரசசல்லாபமாகவே இருந்து வந்தார்—வேறு மங்கை என்று அறியாமலேயே.

சிலகாலம் சென்றபிறகே, தன் சரச சல்லாபத்துக்கு இடமளித்து வரும் இன்பவல்லி, சஞ்சாதேவி அல்ல, சாயாதேவி, என்பது சூரியதேவனுக்குத் தெரிந்ததாம். தெரிந்ததும், தேவியைத் தேடிக்கொண்டு சென்றார்—அம்மையார், யாதுகாரணம் பற்றியோ பெண்குதிரை உருவெடுத்து, எதோ ஓர் மலைச்சாரலில், தவமிருந்து கொண்டிருந்தாராம். கண்டதும் சூரியதேவன், "தேவி இது என்ன கோலம்! என்னை விட்டுப் பிரிந்த காரணம் என்ன?" என்று கேட்டாரா? இல்லை! அவரும் உடனே, ஆண்குதிரை உருவெடுத்து, குதிரையம்மையைத் துரத்தினார்! அது வெறும் வேட்டையாகவில்லை -காதல் விளையாட்டாகி, சூரியக் குதிரையின் நாசியிலிருந்து வீரியம் ஒழுக, அசுவினி தேவர்கள் பிறந்தனர்!

இது, நம் நாட்டுச் சூரியன்! ரிஷி சிரேஷ்டர்களும் தவமுனிவரும், வேத வித்தகரும், கண்டறிந்த உண்மை!

ஆஹா! ஊஹு! பாட, அரம்பை ஊர்வசி ஆட, ஒற்றைச் சக்கரத்தேரேறி, சுற்றி வருபவர், சூரியதேவன்!

இந்த 'உண்மையைக் கூறினவர்கள், சாமான்யர்க' ளென்று அல்ல, சகலகலா வல்லவர்கள் என்று மட்டுமல்ல, மும்மலமடக்கி மூலத்தைக் கண்டறிந்து, கடவுளுடன் தோழமைபூண்ட தூயவர்கள், என்று கூறப்படுகிறது, ஊனக் கண்களுக்குப் புலனாகாத உண்மை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/92&oldid=1703737" இலிருந்து மீள்விக்கப்பட்டது