பக்கம்:புராண மதங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



93 அண்ணாதுரை அவர்களும் அகில உலகிலேயும் உள்ள சாதாரண அறி வுள்ளவர்கள் அனைவருமே, வேறோர் சூரியனைத்தான் காணுகிறார்கள். ஞானக்கண்ணினர் கண்ட சூரியன் தேர் ஏறிச் சுற்றும் ஒரு தேவன்! விஞ்ஞானக் கண்களுக்கு , தேவ னும், தேரும் சக்கரமும் தெரியவில்லை - அவர்கள் காண் பது சூரியன் எனும் ஒரு கோளத்தை - அதிலும் மேரு வைச் சுற்றிவரும் காட்சியை அல்ல, பலகோளங்கள் தன்னைச் சுற்றிவரும் நிலையில் உள்ள சூரியனைக் காண் கிறார்கள். ஞானக்கண்ணினர், கண்டதாக மட்டுமே கூறினர், கருத்துக் குழம்பி இருந்த காலத்தில். இந்த விஞ்ஞானக் கண்ணினர், தாம் கூறுவதைக் கண்டவர் கள், மட்டும்மல்ல, காட்டுபவர்கள், புண்யவான்களுக்கு மட்டும் தெரியக்கூடிய மந்திர உச்சாடனத்தால் அல்ல, அதற்கேற்ற விஞ்ஞானக் கருவியின் துணைகொண்டு, பார்க்கலாம் ! நீ கூறும் விதமாகவா சூரியன் இருக் கிறது என்று இங்குள்ள , சாதாரண மடிசஞ்சிகூட, அறைகூவிக் கேட்டால், 'வா அப்பா!' என்று அழைத் துச் சென்று, நுண்ணறிவினர் தயாரித்த தொலை நோக்கிக் கருவியின் மூலம், கோளங்களைக் காணவைக்க முடியும் ! "எட்டுக் கரத்திலே, நாலுமட்டும் தெரிந்தால் கூடப் போதும்! ஏழு குதிரைகளில் மூன்று தெரிந்தால் போதும்" என்று எவ்வளவு கெஞ்சினாலும், கூத்தாடினா லும், கேலிக்குரலில் கூறினாலும், அறைகூவி அழைத் தாலும், இங்கே உள்ள சங்கராச்சாரியாரோ , தம்பி ரானோ, வேதாந்தியோ, மதவாதியோ , சூரிய தேவனைக் காட்டமுடியாது! ஏனெனில், ஆஹா! ஊஹூ! பாடிட , அரம்பை ஊர்வசி ஆடிட, அரசு செலுத்தும் சூரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/94&oldid=1033333" இலிருந்து மீள்விக்கப்பட்டது