பக்கம்:புராண மதங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை இவ்வளவும் நாரதர் அருளால் கிடைத்த ஞான மல்ல - பகல் என்றும் இரவென்றும் பாராமல், முடிவு களைத் துவக்கங்களாக்கித் தொடர்ந்து நடத்திவந்த ஆராய்ச்சியின் விளைவு. சந்திரனை நாம் நமது புராணத்தின்படி தாரா வுடன் கள்ளக் காதல் நடத்தியவனாகச் சித்தரித்து, அத்துடன் திருப்தி அடைந்தோம், ஆனால் அறிஞர்கள் சந்திர மண்டலத்தைப் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள் ! பல புது உண்மைகளை - ஆச் சரியம் தரும் உண்மைகள் மட்டுமல்ல, பலன் தரும் உண்மைகளைக் கண்டறிந்தனர். நாம் சூரியதேவன், சந் திரதேவன், பூமாதேவி, சமுத்திரராஜன், என்று கதை கள் படித்து, அவைகளை நம்பி, அதற்கேற்ப நமது வழிபாட்டு முறைகளை வகுத்துக்கொண்டிருந்த நாட்க ளிலே, மற்ற நாட்டு 'மேதைகள்' தமக்குத் தெரிந்த அளவு உண்மை போதாது என்று, மேலும் மேலும் உண்மையைக் காண உழைத்தனர். ஞானக் கண்ணி னர், விண் மீன்களைக் காட்டி, அதோ அருந்ததி! மின் னும் அவளுடைய மேலான கதையைக் கேளீர் , என்று கதை கூறினர் - நட்சத்திரங்கள் பலவற்றுக்கும் நவ ரசம் பொருந்திய கதைகளைக் கூறினர் - அந்த நாட்க ளில் - ஆனால் அறிஞர்கள் இந்தக் கதைகளைத் தாண் டிச்சென்று புது உண்மைகளைக் கண்டறிந்தனர் - விண்ணிலே, தெரிவது எல்லாம் நட்சத்திரங்கள் அல்ல அவைகளிலே நட்சத்திரங்களும் உண்டு, கிரஹங்க ளும் உண்டு. நட்சத்திரம் மின்னும், கிரஹங்கள் ஒளி யுடன் விளங்கும் இரண்டும் வெவ்வேறு வகையின. நட்சத்திரங்கள் சொந்தத்திலே ஒளிவிடுவன. கிர ஹங்கள் சூரிய ஒளியைப் பெற்று பிரகாசிப்பன. கிர ஹங்கள் உள்ள இடத்திலிருந்து பலப்பல ஆயிரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/96&oldid=1033335" இலிருந்து மீள்விக்கப்பட்டது