பக்கம்:புராண மதங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புராண -மதங்கள் மைல்களுக்கு மேலே, நட்சத்திரங்கள் உள்ளன என்று கண்டறிந்து கணக்கிட்டுக் கூறினர். சூரிய கிரஹணம், சந்திர கிரஹணம் என்பவை களுக்கு நாம், ராகு கேது கதையைக் கூறி, பாம்புருக் கொண்ட தீயவர் சூரியனைச் சில சமயமும், சந்திரனைச் சில சமயமும், பிடித்து விழுங்க முயற்சிக்கும் சம்பவந் தான், கிரஹணம் என்றும் கிரஹண தோஷம் போக, இன்னவிதமான பூஜைகள் செய்ய வேண்டு மென்றும் கதை பேசிக்கொண்டு, வாழ்க்கையை அதற்கேற்றபடி அமைத்துக்கொண்டு, கிரஹண காலத்தில், தர்ப்பை யைக் கிள்ளி பாண்டங்களில் போட்டுத் தோஷத் தைப் போக்குவதும், குளத்தங்கரையில் உட்கார்ந்து, முணுமுணுக்கும் ஐயருக்குத் தட்சனை தந்தும் காலந் தள்ளி வந்த நாட்களில், விஞ்ஞானிகள் தொலைநோக்கி, நுண்நோக்கி, பெரிதாக்கி, எனும் கருவிகளைக் கண்டு பிடித்து, அவைகளின் உதவியைக் கொண்டு, வான நூலையும் கணித நூலையும் தொடர்பாக்கி, கிரஹணம் ஏற்படும் காரணத்தை விளக்கிக் காட்டி அதன் தொடர்பாகப் பல புது உண்மைகளைக் கூறினர். நம் வீட்டுச் சிறாரும், இப்போது, பாம்பு விழுங் கும் கதையை அல்ல. படிப்பது - விஞ்ஞானி கூறிடும் உண்மையைத்தான் படிக்கிறான். ரமணரின் திருவடி தொழுதாலும், அரவிந்தர் அடிபணந்தாலும், ஆடி யில் காவிடி எடுத்தாலும், மௌன விரதமிருந்தாலும், எவ்வளவு வைதீகராயிருந்தாலும், உலகக் கல்வித் திட்டத்தில் கூட அல்ல, நம் நாட்டுக் கல்வித் திட் டத்திலே கூட கிரஹணத்துக்கு ராகு கேது கதையை விளக்கமாக்கி , உலக முழுவதும் வேறு விதமாகக் கருதினாலும், நாம் அதனை ஏற்போம், நமது ஞானிகள் கண்டறிந்து கூறிய உண்மையையே நாம் நம்புவோம். கிரஹணம் ஏற்படுவது தேவலோகத் தகறாரின் விளை வாக ஏற்பட்ட ராகு கேது சம்பவத்தால் தான் என்று மாற்றி எழுத முடியாது! மானிலம் நகைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/97&oldid=1033336" இலிருந்து மீள்விக்கப்பட்டது