பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



முன்னுரை

திருக்குறளுக்குத் தெளிவுரைகள் பல வந்துள்ளன. புதிதாகத் தோன்றிக் கொண்டே உள்ளன.

பரிமேலழகர் உரை புலவர்க்கு உதவியது. அது திருக்குறளை அறிய அறிவிக்க முழுமையாக உதவியது.

செய்திகளை அறிய வேண்டும் என்ற ஆர்வமும், மிக்க முயற்சியின்றிக் குறட்பாக்களுக்கு உரை காண வேண்டும் என்ற வேட்கையும் தெளிவுரைகள் தோன்றக் காரணம்

ஆயின.

புறநானூறு பழைய உரை பெற்றுள்ளது; செய்யுள் களை அறிய அது மிகவும் உதவுகிறது; என்றாலும் அவற்றின் செய்திகளை அறிவதற்கு அவை போதுவது இல்லை. அவற்றை அறிவதற்கு ஆர்வம் இன்று எழுந்துள்ளது.

சங்க இலக்கியம் தமிழரின் உயர்ந்த குறிக்கோள் களையும், வாழ்வியலையும் அறிவிக்கின்றது. இயற்கை யோடு இயைந்த இன்ப அன்பு வாழ்க்கை’ என்பார் தமிழறிஞர் திரு.வி.க. அதனோடு அவர்கள் வீரமும் கொடையும் அவர்கள்பால் அமைந்த சிறந்த செயற்பாடுகள். புகழ்’ அவர்கள் வாழ்வில் உயர் நோக்கமாக இருந்தது.

பேரரசர் முதல் படைத் தலைவர்கள் வரை அவர்கள் வீரச்சிறப்பு இதில் போற்றப்படுகிறது. மக்கள் வாழ்வியல் இது சித்திரிக்கிறது. பண்பாட்டுக் கருத்துக்களை இவை அள்ளித் தருகின்றன.

“வீரம் அவர்கள் உயிர்நாடியாக விளங்குகிறது. ‘மகளிர் மறம்'எண்ணிப்பார்த்துப் பெருமிதம் அடையும் நிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியம் என்பது உள்ளவற்றை உள்ளவாறு கூறும்போது அது உயர்வு பெறுகிறது.