பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுப் பொன்மொழிகள்

நிலம் பெயரினும் நின்சொற் பெயரல்.

- இரும்பிடர்த்தலையார் அருளும் அன்பும் நீக்கி, நீங்கா நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல் குழவி கொள்பவரின், ஓம்புமதி. -

-நரிவெரூஉத்தலையார் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே.

- குடபுலவியனார் இகழுநர் இசையொடு மாயப் புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே.

- - ஐயூர் மூலங்கிழார் வல்லுநர் வாழ்ந்தோர் என்ப.

- மாங்குடி கிழார் வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்

வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி அருள வல்லை ஆகுமதி.

- உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் -

அறத்து வழிப்படுஉம்.

- கோவூர் கிழார் நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்.

- - ஆலத்தூர் கிழார் வருபடை தாங்கிப் பெயர்புறத் தகர்த்துப் பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை ஊன்று.சால் மருங்கின் ஈன்றதன் பயனே!

- - வெள்ளைக்குடி நாகனார் என்றும், இன்சொல் எண்பதத்தை ஆகுமதி: -

- ஆவூர் மூலங்கிழார்

நீர் மிகின் சிறையும் இல்லை; தீ மிகின், மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை; வளி மிகின் வலியும் இல்லை!

- ஐயூர் முடவனார்